விவோ ரசிகர்களே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. அட்டகாசமா ஒரு புது போன் வருது.. Vivo S15 வாங்கலாம்..
விவோ ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ், விவோ நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு தரமான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, விவோ நிறுவனம் அதன் புதிய Vivo S15 மற்றும் Vivo S15 Pro ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை வரும் வெள்ளிக்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ நிறுவனம் இந்த தகவலை அதன் Weibo பக்கத்தின் ஒரு இடுகை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய Vivo S15 மற்றும் Vivo S15 Pro போனின் அறிமுகம் உறுதி
Vivo இன் துணைத் தலைவர் ஜியா ஜிங்டாங் சில கேமரா மாதிரிகளுடன் தொலைப்பேசிகளின் விவரக்குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் Vivo S15 தொடர் ஸ்மார்ட்போன்கள் 80W சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் OriginOS இல் இயங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. Vivo S15 ஆனது 64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ப்ரோ மாடல் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்யும் என வதந்தி பரவியுள்ளது.

விவோவின் துணைத் தலைவர் இந்த போன் பற்றி என்ன சொன்னார்?
சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் சமீபத்தில் Vivo S15 வரிசையில் Vivo S15e மாடலை வெளியிட்டது. Weibo இடுகையில், Vivo நிறுவனத்தின் சொந்த நாட்டில் Vivo S15 மற்றும் Vivo S15 Pro இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்தது. இதற்கிடையில், விவோவின் துணைத் தலைவர் ஜியா ஜிங்டாங், வரவிருக்கும் மாடல்கள் ஃபிளாக்ஷிப் சிப் மற்றும் 80W சார்ஜிங் திறனைக் கொண்டிருக்கும் என்று உறுதிப்படுத்தினார். அவை OriginOS இல் இயங்குவது டீஸ் செய்யப்படுகின்றன. இந்த மாதிரிகள் வரவிருக்கும் போன்களில் சோனி இமேஜ் சென்சார்களின் கேமரா முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.

பெஸ்ட் போனில் கிடைக்கும் டாப் அம்சங்கள் என்னென்ன?
இருப்பினும், இந்த வெளியீட்டு நிகழ்வு எப்போது என்று தெரியவில்லை.கடந்த கசிவுகளின்படி , Vivo S15 Pro ஆனது MediaTek Dimensity 8100 SoC மூலம் இயக்கப்படலாம், இது 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Vivo S15 ஆனது 6.62' இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என வதந்தி பரவியுள்ளது.

கொஞ்சம் வெயிட் செய்து வாங்கலாமா?
இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பகத்தை பேக் செய்ய வாய்ப்புள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையில் கூட இந்த சாதனம் விரைவில் களமிறங்கவுள்ளது. புதிய போன் வாங்கும் எண்ணம் இருப்பவர்கள், கொஞ்சம் வெயிட் செய்து இந்த மாடல்களை வாங்கி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications