விவோ எஸ்12, விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
விவோ நிறுவனம் சீனாவில் விவோ எஸ்12, விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சற்று உயர்வான விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். விரைவில் விவோ எஸ்12, விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எஸ்12 அம்சங்கள்
விவோ எஸ்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது விவோ எஸ்12 . குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

விவோ எஸ்12 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 1100 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். அதேபோல் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ எஸ்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா ( f/1.8 lens that offers 2x optical and 20x digital zoom) + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் இந்த சாதனம் டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் முன்பக்கம் 44எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன.

விவோ வி12 ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44 வாட் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே
கைரேகை சென்சார் எனப் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5ஜி 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி12 மாடல்.

விவோ எஸ்12 விலை
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்12 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,799 (இந்திய மதிப்பில் ரூ.33,100) ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்12 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.35,500) ஆக உள்ளது.

விவோ எஸ்12 ப்ரோ
விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,376 பிக்சல் தீர்மானம், 19:8:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. மேலும் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா( f/1.8 lens that offers 2x optical and 20x digital zoom) +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் இந்த சாதனம் டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் முன்பக்கம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4கே வீடியோவை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44 வாட் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்;வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி12 ப்ரோ மாடல்.

விவோ எஸ்12 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ.40,200) ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ.43,700)ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications