டூயல் செல்பீ கேமராவுடன் விரைவில் வெளிவரும் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் டூயல் செல்பீ கேமரா, தரமான சிப்செட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.

அதேபோல் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும்.
விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ எஸ்21 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த விவோ Y32 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ Y32 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் டில்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y32 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y32 ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
விவோ Y32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y32 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். டூயல் சிம், 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடல். ப்ளூ, ஃபோகி நைட் என்ற இரண்டு நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications