Home
Mobile

விவோ எஸ்12 விலை, அம்சங்கள் லீக்- 12 ஜிபி ரேம், 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு!

விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் சீன டெலிகாம் பட்டியல் மூலம் வழங்கப்பட்டுள்ளன. விவோ எஸ்12 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை சிஎன்ஒய் 2999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்தியா மாறுபாட்டின் விலை ரூ.35,700 ஆக இருக்கிறது.

விவோ எஸ்12 மற்றும் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

விவோ எஸ்12 மற்றும் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

விவோ எஸ்12 மற்றும் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 22 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆன்லைன் அறிமுகத்திற்கு முன்பாக, வெண்ணிலா விவோ எஸ்12 சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் சீன டெலிகாம் பட்டியலில் காணப்பட்டுள்ளது. கசிந்த விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்10 ஸ்மார்ட்போனை போன்ற இருக்கின்றன. விவோ எஸ்12 ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. விவோவின் வரவிருக்கும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூன்று வண்ணங்களில் வரும் என டீஸ் செய்யப்பட்டுள்ளன.

விவோ எஸ்12 விலை குறித்த தகவல்கள்

விவோ எஸ்12 விலை குறித்த தகவல்கள்

விவோ எஸ்12 விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. Gizmochina-வின் அறிக்கைப்படி, விவோ எஸ்12 ஸ்மார்ட்போன் சீன டெலிகாம் தயாரிப்பில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைத் தகவல்படி, விவோ எஸ்12-ன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை சிஎன்ஒய் 2999 ஆக இருக்கிறது, இந்திய மதிப்புப்படி ரூ.35,700 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 3339 சிஎன்ஒய் ஆக இருக்கிறது. இந்திய விலை மதிப்புப்படி ரூ.39,700 ஆக இருக்கிறது. ஐலேண்ட் ப்ளூ, ஷைனிங் பிளாக் மற்றும் வார்ம் கோல்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பத்தில் வரும் கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக விவோ எஸ்12 தொடர் தனித்துவமான வண்ண விருப்பங்களோடு விவோ முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளது.

விவோ எஸ்12 விவரக்குறிப்புகள் குறித்த அறிக்கை

விவோ எஸ்12 விவரக்குறிப்புகள் குறித்த அறிக்கை

விவோ எஸ்12 விவரக்குறிப்புகள் குறித்த அறிக்கையின்படி, விவோ எஸ்12 ஸ்மார்ட்போனானது 6.44 முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் வரும் என காணப்படுகிறது. விவோ எஸ்10 சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி உடன் வரும் எனவும் இதே சிப்செட் வரவிருக்கும் விவோ எஸ்12 சாதனத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு ரேம் விருப்பங்களில் வருகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வண்ண விருப்பத்தில் வரும் எனவும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவோ எஸ்12 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

 டிரிபிள் ரியர் கேமரா

டிரிபிள் ரியர் கேமரா

விவோ எஸ்12 டிரிபிள் ரியர் கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 44 மெகாபிக்சல் பிரதான செல்பி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஸ்னாப்பர் உள்ளிட்ட இரட்டை செல்பி கேமராக்கள் அடங்கும் என கூறப்படுகிறது. விவோ எஸ்12 ஸ்மார்ட்போனானது 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் 4200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Vivo S12 Might Launching with 12GB RAM, 44W Fast Charging and More: Tipped by China Telecom Listing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X