விரைவில் அறிமுகமாகும் விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கருப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 x 2400பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்தவிவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா 10 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும்.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனில் 2.44ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எஸ்10இ ஸ்மாரட்போனில் 3970 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன்.

வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ எஸ்10இஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுபோன்று விவோ நிறுவனம் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் விவோ நிறுவனத்தின் ஒரு சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications