மூன்று விவோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
இந்தியாவில் விவோ எஸ்1 ப்ரோ, விவோ Z1 Pro, விவோ Z1x ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஆனது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். இருப்பினும்,இந்த மூன்று விவோ ஸ்மார்ட்போன்களுக்கான புதுப்பிப்புகள் தற்போது கிரேஸ்கேல் சோதனையின் கீழ் உள்ளன என்று கூறப்படுகிறது.

ஒரு சில பயனர்கள் விவோ எஸ்1 ப்ரோ,விவோ எஸ்1 ப்ரோ, விவோ Z1 Pro, ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளனர். சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இப்போது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது, தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.
விவோ எஸ்1 ப்ரோ ஸமார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக அம்சம் சற்று வித்தயசமாக உள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டைமண்ட் வடிவில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications