Home
Mobile

Vivo S1 Pro ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ நிறுவனத்தின் விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

குறிப்பாக விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைகுறைப்பை முதலில் கண்டறிந்து தெரிவித்தது மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் ஆன மகேஷ் டெலிகாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரையிலாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் போர்ட்டல்களில் பிரதிபலிக்கவில்லை. இந்த வலைதளங்கள் இன்னும் இந்தத ஸ்மார்ட்போனை ரூ.19,990 க்கு தான் விற்பனை செய்கின்றன.

விவோ எஸ்1 ப்ரோ டிஸ்பிளே

விவோ எஸ்1 ப்ரோ டிஸ்பிளே

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

விவோ எஸ்1 ப்ரோ ஸமார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விவோ எஸ்1 ப்ரோ கேமரா

விவோ எஸ்1 ப்ரோ கேமரா

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக அம்சம் சற்று வித்தயசமாக உள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டைமண்ட் வடிவில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo S1 Pro price slashed by Rs 1,000 And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X