சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் முழுவிவரம்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,990-விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 10சதவிகிதம் கேஷ்பேக்

10சதவிகிதம் கேஷ்பேக்

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகளும், விவோ நிறுவனம் சார்பில் சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ எஸ்1 ப்ரோ

விவோ எஸ்1 ப்ரோ

டிஸ்பிளே விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே என்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

சத்தமின்றி இஸ்ரோ மற்றும் சியோமி இணைந்து உருவாக்கும் புதிய 'NavIC' சிப்செட்.! எதற்கு தெரியுமா?

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ எஸ்1 ப்ரோ  கேமரா

விவோ எஸ்1 ப்ரோ கேமரா

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராக அம்சம் சற்று வித்தயசமாக உள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டைமண்ட் வடிவில் உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்ப மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி

விவோ எஸ்1 ப்ரோ பேட்டரி விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

விவோ எஸ்1 ப்ரோ ஸமார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo S1 Pro launched in India for Rs 19,990 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X