Home
Mobile

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு.!

விவோ நிறுவனம் தனது விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துவிட்டது.

 விவோ எஸ்1 விலை:

விவோ எஸ்1 விலை:

இந்நிலையில் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை தற்போது வெளிவந்துள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ரூ.19,990 என்றும், பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990-ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 டிஸ்பிளே

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக்:

ஆக்டோ-கோர் மீடியாடெக்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விவோ எஸ்1 கேமரா:

விவோ எஸ்1 கேமரா:

விவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

விவோ எஸ்1 பேட்டரி:

விவோ எஸ்1 பேட்டரி:

விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo S1 price and variants leaked ahead of India launch on August 7 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X