மூன்று கேமராக்களுடன் அசத்தலான விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சீனாவில் விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.23,570-ஆக உள்ளது.

சீனாவில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,குறிப்பாக நீலம் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே
விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி:
மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 24.8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
விவோ எக்ஸ்27 சாதனத்தில் 3940எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications