6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

|

விவோ நிறுவனம் நேற்று 6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, ஏறகனவே 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட விவோ எஸ்1 மாடல், பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட விவோ எஸ்1 மாடல் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது, இந்நிலையில் புதிதாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜபி மெமரியுடன் விவோ எஸ்1 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

விவோ எஸ்1 மாடல் விலை

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.17,990/-

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.19,990/-

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் விலை ரூ.18,990/-

டிஸ்பிளே

விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்தியா: செப்டம்பர் 16: மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!இந்தியா: செப்டம்பர் 16: மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் .

கேமரா

விவோ எஸ்1 கேமரா: விவோ எஸ்1 ஸ்மார்ட்போனpன் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

மெமரி நீட்டிப்பு வசதி

128ஜிபி உள்ளடக்க மெமரி மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க!14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை! பெற்றோர்கள் கட்டாயம் படிங்க!

இணைப்பு ஆதரவுகள்

விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo S1 6GB + 64GB Model Launched in India and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X