ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் களமிறங்கும் முதல் விவோ ஸ்மார்ட்போன்.!
இதற்குமுன்பு அறிமுகம் செய்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், எச்டிஆர் மோட் என பல்வேறு ஆதரவுகள் இருந்தது என்று தான் கூறவேண்டும்.
விவோ நிறுவனம் எப்போதும் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி விரைவில் விவோ இசெட்-சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அதிநவீன தொழில்நுட்ப
வசதிகளுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக பாப்-அப் செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.

விவோ நிறுவனம்
விவோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதல் ஸ்னாப்டிராகன் 712சிப்செட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வதிகளுடன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். அதேசமயம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியை விட ஓரளவு வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 712சிப்செட்
விவோ நிறுவனம் கொண்டுவரும் ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதி பொறுத்தவரை கேமிங் செயல்திறன் மற்றும் 4கே டிஸ்பிளே போன்ற அம்சங்களுக்கு மிகவும் அருமையாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அட்ரினோ 616ஜிபியு வசதி உடன் வருவதால் போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் குவால்காம் ஆக்டோ-கோர் போன்ற மென்பொருள் ஸ்மார்ட்போனை வேகமாகவும், இயக்கத்திற்கும் தகுந்தபடி வைத்திருக்கும் வகையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மாதங்களில் விவோ இசெட்- சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு இந்த ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதி இருக்குமென்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இசெட்- சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்பு அறிமுகம் செய்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், எச்டிஆர் மோட் என பல்வேறு ஆதரவுகள் இருந்தது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் விரைவில் வெளிவரும் விவோ ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், பாப்-அப் கேமரா போன்ற பல்வேறு புதிய
வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசெட்-சீரிஸ் சாதனங்களின் டிஸ்பிளே
விவோ இசெட்-சீரிஸ் சாதனங்களின் டிஸ்பிளே மிகப்பெரியதாக இருக்கும் என்று அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுளளது, அதேசமயம் சிறந்த மல்டிமீடியா வசதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என பல்வேறு அம்சங்களும் இடம்பெறும். குறிப்பாக சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் இந்த இசெட்-சீரிஸ் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
பின்பு விரைவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் இசெட்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று ரியர் கேமரா அமைப்புகள் மற்றம் வைட்-ஆங்கிள் லென்ஸ்-க்கு அதிக முக்கியத்துவம், போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பேட்டரி, இணைப்பு ஆதரவுகள் கூடிய வசதிகளுடன் இந்த இசெட்-சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பு உள்ளது
இந்திய சந்தையில் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் விரைவில் வெளிவரும் இசெட்-சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவு விற்பனை செய்யப்படும் எனஎ
எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications