சத்தமில்லாமல் இன்பதிர்ச்சி கொடுத்த Vivo.. ஆண்ட்ராய்டு 16 OS அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவோ நிறுவனம் தனது விவோ போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட்-ஐ வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பல அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைத்து வருகிறது. அதுவும் இந்த ஆண்ட்ராய்டு 16 அப்டேட் ஆனது OriginOS 6 ஸ்கின் உடன் வருகிறது.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெற தொடங்கியுள்ள விவோ மற்றும் iQOO போன்களின் பட்டியலை gizmochina இணையதளம் வெளியிட்டுள்ளது. இப்போது நாம் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெற தொடங்கியுள்ள போன்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

விவோ போன்கள்
விவோ எக்ஸ் போல்டு 5 (Vivo X Fold 5)
விவோ எக்ஸ் போல்டு 3 ப்ரோ (vivo x fold 3 pro)
விவோ எக்ஸ்200 (Vivo X200)
விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro)
விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE)
விவோ எக்ஸ்100 (Vivo X100)
விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro)
விவோ எக்ஸ்90 (Vivo X90)
விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro)
விவோ வி60இ (Vivo V60e)
விவோ வி60 லைட் 5ஜி (Vivo V60 Lite 5G)
விவோ 50 (Vivo V50)
விவோ வி50இ (Vivo V50e)
விவே வி40 (Vivo V40)
விவோ வி40 ப்ரோ (Vivo V40 Pro)
விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro)
விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra)
ஐக்யூ போன்கள்
ஐக்யூ 13 (iQOO 13)
ஐக்யூ 12 (iQOO 12)
ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10)
ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R)
ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro)
மேலே உள்ள பட்டியலில் இருக்கும் போன்கள் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஒரே நேரத்தில் அனைவருக்கும் கிடைக்காது. அதாவது படிப்படியாக இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் இதில் சில போன்களுக்கு அப்டேட் கிடைக்கவில்லை என்றால் இன்னும் சில நாட்கள் ஆகலாம். உங்களிடம் விவோ போன் இருந்தால் செட்டிங்ஸ் (Settings) மற்றும் சிஸ்டம் அப்டேட் (System update) பகுதியில் இந்த அப்டேட் கிடைத்துள்ளதா இல்லையா என்று சரிபார்க்கலாம்.

விவோ எக்ஸ200டி
சமீபத்தில் வெளியான தகவலின்படி, வரும் ஜனவரி 27-ம் தேதி இந்தியாவில் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். அதுவும் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400 plus) சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS), 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, 6200mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) போன்ற வசதிகளும் இந்த விவோ எக்ஸ200டி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








