Vivo V20 சீரிஸ் வரிசையில் Vivo V20, Vivo V20 ப்ரோ, Vivo V20 SE எது இந்தியாவில் அறிமுகமாகும்?

|

விவோ வி 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது. விவோவ V20 சீரிஸ் வெளியீட்டு தேதி நேற்று கசிந்தது, இப்போது நிறுவனம் வரவிருக்கும் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் டீசர் மூலம் உறுதி செய்துள்ளது.

விவோ V20 சீரிஸ்

விவோ V20 சீரிஸ்

விவோ V20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வரிசையில் விவோ வி 20 மற்றும் விவோ வி 20 புரோ 5 ஜி மற்றும் விவோ வி 20 எஸ்இ ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20

இதில் எந்த மாடல் இந்தியாவுக்கு வரும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இரண்டு மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விவோ நிறுவனம் சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஒரு நிகழ்வில் விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!SBI வாடிக்கையாளர்களுக்கு வங்கி வெளியிட்ட எச்சரிக்கை செய்தி! இதை மட்டும் செய்யாதீர்கள்!

விவோ V20 SE

விவோ V20 SE

அதேபோல், இந்நிறுவனம் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வி 20 தொடரின் கீழ் விவோ V20 SE ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் விவோ நிறுவனம் என்ன மாடலை அறிமுகம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

விவோ V20 SE விவரக்குறிப்புகள்

விவோ V20 SE விவரக்குறிப்புகள்

  • 6.44' இன்ச் உடன் கூடிய 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே
  • 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 20: 9 விகித அளவு
  • அட்ரினோ 610 ஜி.பீ.யூ
  • 2GHz ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
  • Funtouch OS 11 உடன் ஆண்ட்ராய்டு 10
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 1TB வரை மைக்ரோ எச்டி ஸ்டோரேஜ்
  • வாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா?- புகார் அளிப்பது எப்படி?வாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா?- புகார் அளிப்பது எப்படி?

    கேமரா அமைப்பு
    • டிரிபிள் கேமரா அமைப்பு
    • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • எல்இடி ஃபிளாஷ்
    • 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • 33W பாஸ்ட் சார்ஜிங்
    • 4000 எம்ஏஎச் பேட்டரி
    • விவோ V20 ப்ரோ விவரக்குறிப்புகள்

      விவோ V20 ப்ரோ விவரக்குறிப்புகள்

      • 6.44' இன்ச் கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே
      • அட்ரினோ 620 ஜி.பீ.யு
      • 2.2GHz ஸ்னாப்டிராகன் 765G 7nm பிராசஸர்
      • Funtouch OS 11 உடன் ஆண்ட்ராய்டு 10
      • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
      • பிரைமரி கேமரா
        • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
        • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
        • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்.
        • 44 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் 105 ° அல்ட்ரா-வைட் கொண்ட டூயல் செல்ஃபி கேமரா
        • 33W பாஸ்ட் சார்ஜிங்
        • 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Vivo officially teases V20 series launch in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X