ஸ்னாப்டிராகள் 710 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் விவோ நெக்ஸ்.!
விவோ நெக்ஸ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
விவோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி வரும் ஜூன் 12-ம் தேதி புதிய விவோ நெக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் டூயல் கேமரா, ஸ்னாப்டிரான் 710 சிப்செட், பெசல்-லெஸ் டிஸ்பிளே போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ நெக்ஸ் :
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
விவோ நெக்ஸ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:
இந்த விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா
8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக்
வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3080எம்ஏஎச்:
விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications