மீண்டும் வரும் நெக்ஸ் தொடர்: உயர்தர அம்சங்களோடு விவோ நெக்ஸ் சீரிஸ்- எப்போது அறிமுகம்?

|

விவோ நெக்ஸ் தொடர் ஸ்மார்ட்போனானது விரைவில் தொடங்கப்படலாம் என அறிவிக்கப்பட இருக்கிறது. விவோ நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனானது முதன்மை விவரக்குறிப்புகளுடன் வரலாம் என கூறப்படுகிறது. விவோ நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 898 எஸ்ஓசி உடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விவோவின் நெக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்கள்

விவோவின் நெக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்கள்

விவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் தொடர் என்பதை கேள்விப்பட்ட நீண்ட காலமாக ஆகியிருக்கலாம். காரணம் இந்த தொடரின் கீழ் எந்த சாதனமும் அறிமுகம் செய்து வருடக்கணக்கில் ஆகிறது. தற்போது இதுகுறித்த புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் எஸ்இசி வரவிருக்கும் டாப் ஆஃப் லைன் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது நெக்ஸ் தொடரின் கீழ் விவோ புதிய ஃபிளாக்ஷிப் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது.

விவோவின் அடுத்த ஸ்மார்ட்போன்

விவோவின் அடுத்த ஸ்மார்ட்போன்

வெய்போவின் டிஜிட்டல் சேட் நிலையத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில், விவோவின் அடுத்த ஸ்மார்ட்போன் நெக்ஸ் வரிசை சாதனமாக இருக்கும் என டிப்ஸ்டர் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டர் தெரிவிக்கிறது. விவோ நெக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ 9 தொடர் ஸ்மார்ட்போன் தொடங்கப்படலாம் என அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்த வரையில், ஸ்னாப்டிராகன் 898 ஆனது ஆக்டோ கோர் சிபியுவை கொண்டிருக்கும் என சமீபத்தில் குறிப்பிடுகிறது.

அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ்

அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ்

இது கார்டெக்ஸ்-எக்ஸ் 2 முதன்மை மையத்துடன் 3x கோர்டெக்ஸ்-ஏ 719 அடிப்படையிலான செயல்திறன் கோர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்துடன் இருக்கும் எனவும் ஆற்றல் திறன் கொண்ட கார்டெக்ஸ்-ஏ 510 அடிப்படையிலான கோர்களையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அட்ரினோ 730 ஜிபியு கிராபிக்ஸ் மற்றும் சாம்சங் ஸ்னாப்டிராகன் 898 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா பில்ட்கள்

ஆண்ட்ராய்டு 12 பீட்டா பில்ட்கள்

விவோ தொடர்பு குறித்து வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 12 பீட்டா பில்ட்களை பெறும் சாதனங்களின் பட்டியலை நிறுவனம் அறிவித்தது. விவோ எக்ஸ், வி, ஒய் மற்றும் எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களுக்கான ஃபன்டச் ஓஎஸ் பீட்டா பதிப்பின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 பதிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பின் மூலம் விவோ அதன் சாதனங்களை மென்மையான அனுபவத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் அறிமுகம்

மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் அறிமுகம்

விவோ ஒய்71 டி ஸ்மார்ட்போனானது அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ ஒய்71டி ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்புப்படி ரூ.21,000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கல் குறித்து பார்க்கலாம். விவோ ஒய்71டி நிறுவனத்தின் ஒய் தொடரின் சமீபத்திய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய விவோ போன் ஆனது 20:9 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. விவோ ஒய்71 டி இரட்டை பின்புற கேமராக்கள் அமைப்புகளுடன் வருகிறது. 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களுடன் வருகிறது. விவோ ஒய்71டி முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. ஐந்து அடுக்கு திரவ குளிரூட்டும் அமைப்புகளுடன் வருகிறது.

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள்

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள்

விவோ ஒய்71டி விலை, அம்ங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.21000 ஆக இருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு விலை ரூ.23,400 ஆக இருக்கிறது. இது மிராஜ் மற்றும் மிட்நைட் ப்ளூ வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த சாதனம் தற்போதே சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விற்பனை நவம்பர் 1 அன்று திட்டமிடப்பட்டிருக்கிறது. விவோ ஒய்71டி குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விவோ ஒய்7டி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்7டி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்7டி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இரட்டை சிம் (நானோ) ஆதரவு ஆண்ட்ராய்டு 11 ஒரிஜினல் 1.0 உடன் இயங்குகிறது. 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், விவோ ஒய்71டி ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் உள்ளமைக்கப்பட்ட ரேம் வசதியானது 4ஜிபி வரையிலான மெய்நிகர் விரிவாகத்தைக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo NEX Series Smartphone Might Launching With Snapdragon 898 SoC: Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X