வியக்கவைக்கும் விலையில் விவோ நெக்ஸ் எஸ் & நெக்ஸ் ஏ அறிமுகம்.!
விவோ நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ நெக்ஸ் எஸ் மற்றும் விவோ நெக்ஸ் ஏ என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்ங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அம்சம், 3டி தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்.
மேலும் இந்திய சந்தையில் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ் எஸ்:
விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விவோ நெக்ஸ் எஸ் கேமரா:
விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:
விவோ நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.47,400-ஆக உள்ளது.

விவோ நெக்ஸ் ஏ:
விவோ நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விவோ நெக்ஸ் ஏ:
விவோ நெக்ஸ் ஏஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா
இவற்றுள் அடக்கம். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது.


விலை:
விவோ நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும்
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.41,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications