6.59-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான விவோ நெக்ஸ்.!

விவோ நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் மெல்லிய பெசல்ஸ் வசதி உள்ளது, பின்பு 91.24சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது.

|

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அந்தவரிசையில் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த விவோ நெக்ஸ் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு போட்டியா தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வெளிவந்துள்ளது. மேலும் மேம்பட்ட மல்டிமீடியா அனுபவங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல். சமீபத்தில் விவோ நிறுவனம் விவோ எக்ஸ் 21-என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, அந்த
ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவோ நிறுவனம் விரைவில் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வரிசிகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.59-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான விவோ நெக்ஸ்.!

மேலும் விவோ நிறுவனம் வரும் ஜூலை 19, 2018 அன்று இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் விவோ நெக்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் பயனர்களுக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ நெக்ஸ்

விவோ நெக்ஸ்

முன்பு சொன்னது போல் இந்த விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் மற்றும் பயனர்களுக்கு தகுந்த அசத்தலான செல்பீ கேமரா போன்ற அம்சங்கள் தேவைப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவோ நெக்ஸ் வடிவமைப்பு:

விவோ நெக்ஸ் வடிவமைப்பு:

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது பயனர்கள் விரும்பும் வகையில் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த அம்சம் இதற்பு முன்பு ஐபோன் எக்ஸ் சாதனத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பார்வை அனுபவத்தை தரக்கூடிய அமசத்தை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பிரபல அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ நிறுவனம் குறிப்பிட்ட அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் மெல்லிய பெசல்ஸ் வசதி உள்ளது, பின்பு 91.24சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் மற்றும் செல்பீ கேமரா போன்றவை சிறந்த மல்டிமீடியா அனுபத்தை கொடுக்கும் விதமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கபட்டுள்ள proximity sensor டிஸ்பிளேவை கட்டுப்படுத்த மிக அருமையா செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த ஆடியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6.59-இன்ச் டிஸ்பிளே:

6.59-இன்ச் டிஸ்பிளே:

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனாது 6.59-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19:3:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது வெளிவரும். மேலும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த டிஸ்பிளே அனுபவம் தரும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே முழுநேர மல்டிமீடியா அனுபவத்தை தரும் வகையில் உள்ளது. திரைப்படங்கள் மற்றும் வீடியேகேம் போன்ற அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்.

அட்டகாசமான செல்பீ கேமரா:

அட்டகாசமான செல்பீ கேமரா:

விவோ நெக்ஸ் செல்பீ கேமரா ஆனாது திறமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் அம்சங்களை கொண்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா மைக்ரோ-ஸ்டாப்பிங் மோட்டர்களால் ஆதரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த செல்பீ கேமராவில் இருப்பதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் அனைவரையும் கவரும்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

 இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்:

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்:

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, எனவே பயனர்கள் மிகவும் பாதுகாப்பாக இந்த சதனத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனாது உங்கள் விரலின் தடத்திற்கு தகுந்த வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இவற்றில் உள்ள சென்சார் சாதனம் திறக்க, மிருதுவான மற்றும் கூர்மையான கைரேகை படங்களை வழங்க ஆப்டிகல் சிக்னல்களை செயல்படுத்துகிறது.

டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது, மேலும்
இந்த ஸ்மார்ட்போன் விரிவான படங்களை கைப்பற்ற 24 மில்லியன் ஃபோட்டோசென்சிடிவ் யூனிட்களைப் பயன்படுத்துவதன் மூலம்
சிறந்த புகைப்படங்களை எடுக்கிறது என்று தான் கூறவேண்டும். பின்பு வேவ்வேறு சூழல்களைக் கண்டுபிடித்து அதற்கு தகுந்த புகைப்படங்களை எடுக்கும் திறமையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதில் உள்ள ஏஐ-அம்சம் மெதுவான இயக்கம்,லைவ் ஃபோட்டோ, போர்ட்ரேட் பொக்கே மற்றும் பல்வேறு பயனுள்ள கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த சாப்ட்வேர் அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், அதன்படி சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட சிப்செட் அன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, இது சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு
தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் அமைந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. பின்ப ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அட்டகசமான செல்பீ கேமரா போன்றவை இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். அதன்பின்பு இந்திய சந்தையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது மிகப் பெரிய
வெற்றியை தரும் என விவோ நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Nex is all set to redefine the premium smartphone category in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X