விவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990

|

இந்தியாவில் செல்போன் நிறுவனங்களில் முன்னணியில் திகழ்கிறது விவோ. இந்த நிறுவனம் ஸ்மார்ட் போன்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த போன்களுக்கு சந்தையில் தனி வரவேற்பும் உள்ளது.

விவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990

செல்போன் சந்தையில் கடும் போட்டி நிலவுவதால், புதிய ஸ்மார்ட் போன்களை பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல் வடிவமதைத்து சந்தை படுத்தி வருகிறது.

விவோ என்எக்ஸ்இ

விவோ என்எக்ஸ்இ

விவோ நிறுவனம் என்எக்ஸ்இ என்ற செல்போனை இன்று (ஜூலை 19ம்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.44 ஆயிரத்து 990. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கருப்பு நிறமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாப்-அப் செல்பி கேமரா:

பாப்-அப் செல்பி கேமரா:

விவோ நிறுவனத்தின் என்எக்ஸ்இ வகை ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமரா மற்றும் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இருக்கும்.

6.59 ஸ்கிரீன் டிஸ்பிளே:

6.59 ஸ்கிரீன் டிஸ்பிளே:

விவோ என்எக்ஸ்இ ஸ்மார்ட் போன் சிலைடர் வகையை சார்ந்தது. இந்த போனின் ஸ்கிரீன் டிஸ்பிளே 6.59 இன்ச் ஆகும். 2,316X1080 என்ற அளவில் பிக்சல் இருக்கும். சில பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடல் போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் வழங்குகிறது.

8 ஜிபி ரேம்:

8 ஜிபி ரேம்:

விவோ என்எக்ஸ்இ வகை போன்கள; 8 ஜிபி ரேமும், உள்ளடக்க மெமரி 128 ஜிபியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. செல்பி கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்363 12-மெகாபிக்சல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

இந்த போன் ஆன்ட்ராய்ட் 8.1 ஓரியே, ஓஎஸ் 4.0 உடன் 4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியும் கொண்டுள்ளது. விரைவாக 22.5 வாட்டில் சார்ஜ் ஆகிறது. டுயல் சிம்முடன் பல்வேறு வசதிகளையும் இந்த போன் பெற்றுள்ளது.

அமேசானில் விற்பனை:

அமேசானில் விற்பனை:

விவோ என்எக்ஸ்இ போன்கள் வரும் 21ம் (ஜூலை) தேதி முதல் ஆன்லைனில் அமேசான் நிறுவனம் விற்கிறது. மேலும் இன்று முதல் ப்ரீ ஆடரும் விடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை எச்டிஎப்சி பேங்க் கடன் அட்டையிலும் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo NEX India launch highlights Priced at Rs 44990 will be available starting July 21: Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X