Home
Mobile

எதிர்காலத்தின் புதிய புரட்சி விவோ நெக்ஸ்.!

விவோ நிறுவனம் தனது மிகவும் புதுமையான பிலாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐ இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

By Sharath

விவோ நிறுவனம் தனது மிகவும் புதுமையான பிலாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐ இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. விவோ நெக்ஸ் இதற்கு முன்பு பார்த்திடாத பல அடுத்த ஜெனரேஷன் சேவைகளோடு இந்த ஆண்டில் வெளியாகிறது. இதன் விலைசுமார் ரூ.44,990 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நெக்ஸ் முதல் உயர்த்தும் கேமரா மற்றும் எதிர்கால-ஸ்கிரீன் ஸ்கேனிங் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்னை விவோ வழங்குகிறது.

விவோ நெக்ஸ் ஜூலை 21, 2018 முதல் அமேசான், விவோ இ-ஸ்டோர் மற்றும் விவோ சில்லறை ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. இப்பொழுது விவோ நெக்ஸ் இந்தச் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரகுறிப்பினை பார்க்கலாம்.

விவோ நெக்ஸ்

விவோ நெக்ஸ்

"அபேக்ஸ்"(Apex) கருத்தின் படி விவோ நெக்ஸ் வடிவமைக்கப்பட்டு MWC 2018 இன் விழாவில் பலரின் மனங்களை கொல்லைக் கொண்டது. அபேக்ஸ் இன் நாட்ச் சேவையில் எண்டு டு எண்டு சேவையில் இயங்கும் உண்மையான ஒரு புதிய ஸ்மார்ட்போன்னை வெளியிட்டிருக்கிறது விவோ நிறுவனம். குறுகிய கால இடைவெளியில் இப்படி ஒரு புதிய ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் விவோ வெற்றி அடைந்தது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

விவோ பேஸில்-லெஸ் டிசைன்

விவோ பேஸில்-லெஸ் டிசைன்

விவோ வின் இந்த புதிய முயற்சி, வரவிருக்கும் ஆண்டுகளில் விவோ தனது முழு ஈடுபாட்டுடன் ஸ்மார்ட்போன் சந்தையில் இன்னும் பல சாதனைகளைச் செய்யுமென்று எதிர்பார்க்கலாம். விவோ நெக்ஸ் இந்த இந்த புதிய உண்மையான பேஸில்-லெஸ் டிசைன் மக்களிடையே நலன் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னும் சந்தையில் சிறந்த மற்றும் புதிய ட்ரெண்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுமென்று எதிர்பார்க்கலாம்.

அட்டகாசமான அல்ட்ரா முழுக்காட்சி டிஸ்பிலே

அட்டகாசமான அல்ட்ரா முழுக்காட்சி டிஸ்பிலே

விவோ நெக்ஸ் அட்டகாசமான அல்ட்ரா முழுக்காட்சி டிஸ்பிலேவை பிரத்தியேக டிசைன் துறையினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட விவோ நெக்ஸ் போன்களும் துல்லியமான நானோ லேசர் கட்டிங் முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின்படி பல்லாயிரக்கணக்கான டைனமிக் வண்ண வேறுபாடு அலகுகளால் செதுக்கப்பட்டு. அதன் பிறகு நான்கு ஒளியியல் மாறுபட்ட பரப்புகளில் ஒவ்வொரு அலையிலும் பிரத்தியேகமாக வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு மேற்பரப்பிலும் நானோ அளவிலான அடுக்கு வரிசையில் பிரீமியம் கண்ணாடி உலோக கோட்டிங்கை கொடுத்து, புதிய கவர்ச்சிகரமான தோற்றத்தை அடைய மீண்டும் மீண்டும் செதுக்கப்படுகிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் அல்ட்ரா முழுக்காட்சித் தரையுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. விவோ நெக்ஸ் 6.59 இன்ச் சூப்பர் அமோலெட் 2160 x 1080 ரெசொலூஷன் பிக்சல் டிஸ்பிளேயுடன் வருகிறது. விவோ நெக்ஸ் நம்ப முடியாத 2.16மிமீ மெலிதான மேல் பெசல், 5.08மிமீ கீழ் பெசல் மற்றும் 1.71மிமீ பக்க ஸ்லிம் ஸ்மார்ட்போன்னாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விவோ (COF)திரை-என்-காப்ஸ்யூலேசன் தொழில்நுட்பத்துடன் 19:3:9 விகிதம் திரையுடன் 5.68 இன்ச் டிஸ்பிலேயுடன் வருகிறது.

உலகின் முதன்மையான உயர்தர கேமரா மற்றும் மறைக்கப்பட்ட உணர்கருவிகள்

உலகின் முதன்மையான உயர்தர கேமரா மற்றும் மறைக்கப்பட்ட உணர்கருவிகள்

விவோ மிகவும் புதுமையான கேமரா வசதியைத் தனது விவோ நெக்ஸ் மாடலில் அறிமுகம் செய்துள்ளது. முதல் உயர்த்தும் திறன் கொண்ட புதிய உயர்தர செல்ஃயி கேமெராவுடன் கூடிய மறைக்கப்பட்ட உணர்கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த உயர்த்தும் கேமெராக்கள் ஒரு ஸ்ப்ரிங் மூலம் உங்கள் செல்ஃபி கேமராவை இயக்குகிறது. நாட்ச் இல்லா முதல் அல்டிமேட் காட்சித்திரைக்கு பின்னால் இந்த உயர்த்தும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புதிய நெக்ஸ் இந்த சிறந்த காட்சி திரை அனுபவத்துடன் உணர்கருவிகள் ஒரு உள் சார்ந்த ஐசி யுடன் கட்டுப்படுத்தப்படுகிறது.

விவோ வின் முதல் தொடுதிரை பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

விவோ வின் முதல் தொடுதிரை பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

விவோ நெக்ஸ் இந்த அல்ட்ரா முழுக்காட்சி திரை சேவை உங்களுக்கு தோடுதிரை பிங்கர் பிரிண்ட் ஸ்கேன் வசதிக்கு அனுமதிக்கிறது. இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் சென்சார்கள் 1செமி அளவில் தொடுதிரைக்கு அடியில் உங்கள் விரல்கள் எளிதாக அணுகும் விதம் பொருத்தப்பட்டுள்ளது. அளவிடக்கூடிய அல்லது அல்ட்ராசவுண்ட் பயோமெட்ரிக் சென்சார்கள் போலல்லாமல், இன்-டிஸ்ப்ளே கைரேகை உணர்திறன் தொழில்நுட்பம் ஒளியியல் கொள்கைகளின் மீது செயல்படுகிறது. நெக்ஸ் இன் அமோலெட் திரையில் நியமிக்கப்பட்ட பகுதியை நீங்கள் தொட்டுக் கொண்டிருக்கும் கணம், உங்கள் விரலின் தடம் வெளிச்சத்தின் வழி உங்கள் கை ரேகையை உணர்கிறது. ஒளி ஃபோட்டான்கள் பிரதிபலிக்கும் திரை கீழே வேரூன்றிய சென்சார் மூலம் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு சிறிய அழுத்தம் தேவைப்படுகிறது. கைரேகை ஐகான் டிஸ்பிலேயில் பிங்கர் ஸ்கேனர் சேவை உறுதிப்படுத்துவதற்காக தொலைப்பேசி திறக்கப்படும்போது காட்சியளிக்கிறது.

ஏஐ ஸ்மார்ட் என்ஜினுடன் விவோ நெக்ஸ்

ஏஐ ஸ்மார்ட் என்ஜினுடன் விவோ நெக்ஸ்

விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் 8ஜிபி ரேம் 128ஜிபி உல் செழிப்புடன் வருகிறது. அதீத செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்குத் தடையில்லா மல்டி டாஸ்கிங் அனுபவம் மற்றும் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. விவோ நெக்ஸ் 4000 எம்எஎச் பேட்டரியுடன் அதிக நேர உபயோகத்தை வழங்குகிறது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இன் 'ஏஐ ஸ்மார்ட் எஞ்சின்', தொடர்ந்து பயனர்களின் முன்னுரிமைகளைக் கண்காணிக்கும், மேலும் புரிதிறன் முறையில் மின்சக்தி திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காகக் கண்காணித்த உண்மையான பயனர் ஆதாரங்களை வழங்குகின்றது. இத்துடன் நெக்ஸ் தனது ஏஐ கேம் பயன்முறையை செயல்படுத்துகையில், மென்மையான கேமிங் அனுபவத்திற்கான விளையாட்டின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு சிபியு (CPU)ஐ சரிசெய்கிறது. நெக்ஸ் இல் ஏஐ கேம் பயன்முறை தற்செயலான டச் செயல்பாடுகளைத் தடுக்கிறது, விளையாட்டாளர்கள் அவர்கள் விரும்பும் நகர்வுகளை மட்டும் செய்ய அனுமதி அளிக்கிறது.

டூயல் லென்ஸ் ஏஐ கேமராவுடன் கூடிய

டூயல் லென்ஸ் ஏஐ கேமராவுடன் கூடிய

விவோ நெக்ஸ் புது ஜெனரேஷன் டூயல் கேமரா அனுபவத்தைச் சோனி IMX363 லென்ஸ் மூலம் சிறப்பாக வழங்குகிறது. 12எம்பி பிரைமரி கேமராவுடன் டூயல் பிக்செல் போக்கஸ்ஸிங்குடன் 1.4μm பிக்செல் சென்சாருடன் வருகிறது. f/1.8 அப்பர்ச்சர் 4 ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டபிளைசேஷன் உடன் வருகிறது. இந்த புதிய கேமரா செட்டப் அட்டகாசமான அனுபவத்தைத் தருகிறது. இதர சேவைகளாக பேஸ் பியூட்டி, எஐ எச்டிஆர்,பாணரோம, டைம் லாப்ஸ், ஸ்லொவ் மோஷன், 4K வீடியோ ரெகார்டிங், ஸ்டூடியோ லைட்ஸ் செல்ஃபிக்காக மற்றும் பல வித பில்டர்களுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Nex: Extreme innovation and Paramount performance : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X