மூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி? எது பின்னாடி?
டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்டபோனில் 10ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இதில் உள்ள மகிவும் சிறப்பம்சம் என்னவென்றால்
இரண்டு அமோல்ட் பேனல் மற்றும் டூயல் ஸ்கரீன் வசதி, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக முன்புறம் மற்றும் பின்புறம் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும், அதாவது பின்புறம் கேமரா இடம்பெற்றுள்ள பகுதியில் கூட டிஸ்பிளேவை இயக்க முடியும்.

டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 29-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது, பின்பு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்டபோன் இரண்டு ஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே பேனல்களை கொண்டுள்ளது, அதன்படி முன்புறம் 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ்(1080x2340 பிக்சல்) டிஸ்பிளே மற்றும் பின்புறம் 5.49-இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி:
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்வே இயக்கததிற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக 199.2கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்டபோனில் 10ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு பேஸ்அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
புதிய டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் சாதனத்தில் 12எம்பி பிரைமரி சென்சார் (f/1.79 aperture) மற்றும் 2எம்பி செகன்டரி நைட் விஷன் சென்சார் (f/1.8 aperture),பின்பு மூன்றாவது டிஒஎப் 3டி ஸ்டிரீயோ கேமரா சென்சார் ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 22.5வாட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4ஜி எல்டிஇ, டூயல்-பேன்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்புஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

விலை:
நீலம் மற்றும் ஊதா நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, குறிப்பாக டூயல் ஸ்கரீன் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.52,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications