6.89-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமராவுடன் விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவு, அட்டகாசமான வடிவமைப்பு, அசத்தலான கேமரா வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால் அதிக வரவேற்பை பெரும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.89-இன்ச் முழு எச்டி பிளஸ் யுஆழுடுநு டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 2256 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுஇந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு, ஃபன்டச் ஒஎஸ்10 ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா
விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 13எம்பி
டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

8ஜிபி/2ஜிபி ரேம்
விவோ நெக்ஸ் 3எஸ் சாதனத்தில் 8ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

4500எம்ஏஎச் பேட்டரி
விவோ நெக்ஸ் 3எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே வீடியோ, வீடியோ கேம், ஆப்பயன்பாடு போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். மேலும் 44வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜி வசதிஇவற்றுள் அடக்கம்.

இந்த சாதனத்தில் 5ஜி ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் 10 க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

ஆரம்ப விலை
மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.53,440-ஆக உள்ளது, பின்பு வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








