Home
Mobile

ஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இதுவரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவம் கொண்டது, பின்பு வேற லெவல் அனுபவத்தை கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ் 3 சாதனம்

குறிப்பாக அன்மையில் வெளியான ஐபோன் 11 ஸ்மார்ட்போன்களை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ நெக்ஸ் 3 ஸமார்ட்போன். இருந்தபோதிலும் தற்சமயம் சீனாவில் மட்டுமே விவோ நெக்ஸ் 3 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் அறிமுகமான ஐபோன் 11 சாதனத்தில் இல்லாத ஒரு அம்சத்துடன் இந்த விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அது என்னவென்றால் 5ஜி திறனை கொண்டு விவோ நெக்ஸ் 3 வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று 4ஜி ஆதரவும் மற்றொன்று 5ஜி ஆதரவு கொண்டும் வெளிவந்துள்ளது.

கிறங்க வைக்கும் டிஸ்பிளே

விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் 6.89-இன்ச் POLED Waterfall FullView டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் றுயவநசகயடட டிஸ்பிளே ஆனது விளிம்புகளில் வளைவுகளை கொண்டுள்ளது, அதுவே அனைவரையும் கிறங்க வைக்கும் உள்ளது. மேலும் இது 99.6 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தையும் வழங்குகிறது. பின்பு 1080ஒ2256 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அட்டகாசமான கேமரா

விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 13எம்பிடெலி போட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடிபிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான சிப்செட் வசதி

விவோ நெக்ஸ் 3 சாதனத்தில் 2.96ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு வைஃபை,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

சேமிப்பு மற்றும் விலை

இந்திய மதிப்பில்...
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,600-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.57,700-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.62,700-ஆக உள்ளது.

மேலும் விவோ நெக்ஸ் 3 உடன் இணைந்து, விவோ நிறுவனம் தனது முதல் ப்ளூடூத் இயர்போனையும் அறிமுகப்படுத்தியது என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Nex 3, Vivo Nex 3 5G Launched: Price, Specifications, Features and Other Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X