பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடிக்கும் விலையில் புது VIVO 5ஜி போன்.. IP69, 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங்!
இந்தியாவில் எப்போது பண்டிகை சீசன் தொடங்குமென்று பல்லை கடித்துக்கொண்டு காத்துக்கிடந்தது போல.. பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை வரிசையாக அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வரிசையில் விவோ நிறுவனமும் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது
என்ன மாடல்? அது விவோ வி60இ 5ஜி (Vivo V60e 5G) ஸ்மார்ட்போனாகும். இந்த புதிய வி சீரிஸ் போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் விவோ நிறுவனத்தால் பகிரப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக, இதன் அறிமுகம் மிக தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும் படியாக, விவோ வி60இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

விவோ வி60 இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: 91மொபைல்ஸ் ஹந்தி வழியாக கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.30,999 மற்றும் ரூ.31,999 ஆக இருக்கலாம். விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்ட்.
விவோ வி60இ 5ஜி டிசைன்: டிசைனை பொறுத்தவரை இது விவோ வி60 ஸ்மார்ட்போனை போலவே இருக்கலாம். அதாவது மேல் வலது மூலையில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். மேலும் கேமரா ஐலேண்ட்டிற்கு அடுத்ததாக ஒரு எல்இடி ரிங் லைட்டும் இடம்பெறலாம். விவோ பிராண்டிங் ஆனது பேக் பேனலின் அடிப்பகுதியில் செங்குத்தாக பொறிக்கப்படலாம்.
விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிப்செட்டை பொறுத்தவரை விவோ வி609 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ வி50இ ஸ்மார்ட்போனில் காணப்படும் அதே சிப் ஆகும்.
மேலும் இது விவோ வி50இ ஸ்மார்ட்போனில் உள்ள அதே - தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன் இடப்பெறும் என்றும் கூறப்படுகிறது;இதுவும் விவோ வி50இ மாடலில் உள்ளது!
முக்கிய மேம்பாடு பேட்டரி டிப்பார்ட்மென்ட்டில் இருக்கலாம். விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவோ வி50இ ஸ்மார்ட்போனில் கிடைக்கும் 5600mAh பேட்டரியை விட அதிகமாகும்
முன்னதாக அறிமுகமான விவோ விV50இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.77-இன்ச் FHD+ குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் ரேட்
- SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ்
- HDR10+ ஆதரவு
- டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி IMX882 பிரைமரி கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் f/1.79)
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் ஷூட்டர் (116-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் f/2,2)
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,600mAh பேட்டரி
- IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்.


Click it and Unblock the Notifications








