Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. ஆபர் விலையில் விற்பனை.. VIVO-வின் லேட்டஸ்ட் 5G போன்.. என்ன மாடல்?

சில தினங்களுக்கு முன்னர்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று இந்திய சந்தையில்.. ரூ.10,000 பட்ஜெட்டில் பக்காவான அம்சங்களுடன் அறிமுகமான விவோவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 4) முதல் விற்பனைக்கு வருகிறது. அதென்ன மாடல்? அதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஜூலை 2024 இல் இந்திய சந்தையில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? அவர்களுக்காக காத்திருக்கலாமா அல்லது இந்த விவோ ஸ்மார்ட்போனையே வாங்கலாமா? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட், ஐபி64 ரேட்டிங் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் ஆகியவற்றுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் விவோ ஒய்28எஸ் 5ஜி (Vivo Y28s 5G) ஸ்மார்ட்போனின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகும்.

ஆபர் விலையில் விற்பனை.. VIVO-வின் லேட்டஸ்ட் 5G போன்!

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் (1612 x 720 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 840நிட்ஸ் tபீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 6ஜிபி வரை அதிகரிக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் ஏஐ-ஆதரவு கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ளவாட்டர் டிராப் நாட்ச்சில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா வைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 மதிப்பீட்டுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் 5ஜி கனெக்டிவிட்டியையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 உடன் அனுப்பப்படுகிறது.

என்ன விலை? விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை 4) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாஙகினால் ரூ.500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி ஆனது ஸ்மாட்போனின் தொடக்க விலையை ரூ. 9,999 ஆக குறைக்கும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் - மெஜஸ்டிக் பிளாக் மற்றும் வைப்ரண்ட் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

இந்த ஜூலை 2024 இல் இந்திய சந்தையில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ரெட்மி நிறுவனமானது ஜூலை 9 ஆம் தேதியன்று ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனையும். அதற்கு முன்பாகவே நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளன.

பின்னர் ஜூலை 10 ஆம் தேதியன்று மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய நிறுவனமான லாவா மொபைல்ஸ் அதன் பிளேஸ் சீரிஸின் கீழ் லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. மேலும் ஐக்யூ நிறுவனமானது வருகிற ஜூலை 15 ஆம் தேதியன்று ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo New 5G Phone Under Rs 12000 Vivo T3 Lite 5G First Sale Today in India Offers Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X