Power Bank-களுக்கு இனி வேலை இல்லை.. 7500mAh பேட்டரி உடன் புதிய Vivo போன்.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் வருகிற மார்ச் 14 ஆம் தேதி அன்று சீனாவில் விவோ ஒய்300ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது சமீபத்தில் மலேசியா மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்39 5ஜி மற்றும் விவோ டி4எக்ஸ் 5ஜி ஆகியவற்றின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விவோ ஒய்300 சீரீஸில் (Vivo Y300 Series) பல மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் ஒன்று விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் (Vivo Y300 Pro Plus) ஸ்மார்ட்போனாகும். இதுதான் 7500mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் (Panda is Bald) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 3 சிப்செட் மற்றும் 7320mAh வீத மதிப்புள்ள பேட்டரியை கொண்டிருக்கும். இந்த பேட்டரியின் வழக்கமான மதிப்பு சுமார் 7,500mAh ஆக இருக்கலாம்.
இதுதவிர்த்து விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும். ரியர் கேமரா செட்டப்பை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதுதவிர்த்து விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
விவோ ஒய்300 சீரிஸில் விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை பொறுத்தவரை விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது, சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே ப்ரோ பிளஸ் மாடல் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி வகைகளிலும் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.68-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரைகொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ்5 உடன் அனுப்பப்படலாம்.
கேமராவை பொறுத்தவரை, விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம். இதில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது; ஆனால் நிச்சயமாக இதைவிட அதிகம் எதிர்பார்க்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 6,500mAh பேட்டரியுடன் வரலாம். கடைசியாக இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 14 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 6ஜிபிரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.14,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கும்.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மார்ச் 12 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








