அசத்தும் டுயல் கேமராவுடன் விவோ வ்யை 83 ப்ரோ அறிமுகம்.!
விவோ வ்யை 83 ப்ரோ ரீடெய்லர் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான ப்ரி ஆடரும் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் பிளாக், அரோரா ஒய்ட், ரெட், கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தான் விவோவின் வ்யை 83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதேமாடல் போனை அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் விவோ நிறுவனம் வ்யை 83 ப்ரோ என்று அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் வெளியிடப்பட்டது:
விவோ வ்யை 83 ப்ரோ ரீடெய்லர் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான ப்ரி ஆடரும் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் பிளாக், அரோரா ஒய்ட், ரெட், கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது.

வ்யை 83 ப்ரோ விலை அறிமுகம்:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவோ வ்யை 83 ப்ரோ விலை ரூ. 15,990 ஆகும். இந்த போன் டூயல் கேமராவுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 13 மெகா பிக்சல் சென்சார் கேமராவும் இருக்கின்றது. இரண்டாம் நிலையில் 2 மெகா பிக்சல் கேமராவும் இருக்கின்றது.

திரை விபரம்:
வ்யை 83 ப்ரோ ஸ்மார்ட் போன் திரை 6.22 ஹெச்டி இன்ச் கொண்டது. டிஸ்பியே ரேசியோ 19:9 என்று இருக்கின்றது. ஹேலிக்கோ பி 22 ஆக்டோ கோர் எஸ்ஓசி வழங்குகின்றது. மேலும் 4 ஜிபி ரேம், உள்ளடக்கம் 64 ஜிபியும் இருக்கின்றது. மேலும் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டிகார்டை அனுமதிக்கின்றது.

3,260 எம்ஏஹெச் பேட்டரி:
விவோ வ்யை 83 ப்ரோ ஸ்மார்ட் போனுக்கு 3,260 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. மேலும் 8.1 ஆன்ட்ராய்டு ஓரியோ இயக்குகின்றது. பன்டச் ஓஎஸ் 4.0, டுயல் சிம், 4 ஜிஎல்இடி, பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications