ஒய்.. 20 எம்பி செல்பீ..! எனக்கு எப்போ ப்ரீ-ஆர்டர் ஓகே சொல்லுவ.?!
விவோ அதன் வி3 கருவியின் வெற்றியை தொடர்ந்து இப்போது அந்த வரிசையில் வி5 கருவியை அறிமுகம் செய்துள்ளது.
செல்பீயை மையமாக கொண்ட விவோவின் வி5 ஸ்மார்ட்போன் கருவி இன்று இந்தியாவில்அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் புதன்கிழமை முதல் (நாளை) முதல் 22 நகரங்களில் ப்ரீ ஆர்டர் நிகழ்த்த தயாராகும் மற்றும் நவம்பர் 26-இல் ரூ17,980/- என்ற விலைக்கு சந்தைக்குள் நுழையும்.
ஆனால் அதன் இரட்டை முன்பக்க கேமிரா விவோ வி5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் "விரைவில்" விற்பனைக்கு வரும் என்பது வெளிப்படை ஆனால் அது என்பதை பற்றிய எந்த செய்தியையும் விவோ குறிப்பிடவில்லை. சரி, வரப்போகும் டுவல் முன்பக்க கேமிரா ஒருபக்கம் இருக்கட்டும், அறிமுகமான 20 எம்பி செல்பீகு ஓகே சொல்லுவோம் வாருங்கள்.!

நிற வகை
புதிதாக அறிமுகமான விவோ வி 5 ஸ்மார்ட்போன் ஆனது கிரவுன் தங்கம் மற்றும் விண்வெளி சாம்பல் ஆகிய இரண்டு வகையான நிற வகைகளில் கிடைக்கும்.

'மூன்லைட் க்ளோ'
விவோ வி 5 கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் 'மூன்லைட் க்ளோ' அம்சமும் அதன் 20 எம்பி முன்பக்க கேமிராவும் திகழ்கிறது. மூன்லைட் க்ளோ ஃபிளாஷ் குறைந்த ஒளி புகைப்படத்தை மேம்படுத்த உதவும்.

சோனி ஐமீஎக்ஸ்376 சென்சார்
உடன் அது எப் /2.0அப்பெர்ஷர், சோனி ஐமீஎக்ஸ்376 சென்சார் மற்றும் ஒரு 5பி லென்ஸ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடன் ஸ்மார்ட்போன் பியூட்டி ப்ளஸ் 6.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ
ஸ்டீல் யூனி பாடி வடிவமைப்பு, இரட்டை சிம் அட்டை ஆதரவு, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் ஆகியவைகளும் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்
ஸ்க்ரீன் : எச்டி (720x1280 பிக்சல்கள்) ஸ்க்ரீன்
ரேம் : ஒரு ஆக்டா-கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் 4ஜிப
பின்பக்க கேமிரா : 13 மெகாபிக்சல்
மெமரி : 128GB வரையிலான மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விஸ்தரிக்கலாம்
இன்டர்னெல் மெமரி : 32 ஜிபி
வாட்டர் ரெஸிஸ்டண்ட் கைரேகை சென்சார் : ஆம்
பேட்டரி : 3000எம்ஏஎச்
4ஜி ஆதரவு : ஆம்

மேலும் படிக்க
ரூ.2000/- விலையில் கிடைக்கும் டாப் 5 பீச்சர் போன்கள்.!


Click it and Unblock the Notifications