8ஜிபி ரேம், 50எம்பி கேமரா அமைப்பு: இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்75 5ஜி- சரியான விலை சிறப்பான அம்சம்!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோவின் ஒய் தொடரில் இடம்பெறும் விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் கேமரா அமைப்புகள், மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் கேமரா அமைப்புகள், மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட்

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து இந்த வார தொடக்கத்தில் நிறுவனத்தால் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது தட்டையான வடிவமைப்போடு வட்டமாக சாதனத்தின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சத்தோடு வருகிறது.

விவோ ஒய்75 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ ஒய்75 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் விவோ ஒய்75 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம், இந்தியாவில் விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.21,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது க்ளோவிங் கேலக்ஸி மற்றும் ஸ்டார்லைட் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டார் மற்றும் பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என விவோ தெரிவித்துள்ளது.

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ) ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் (1,080x2,408 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. விவோவின் தகவல்படி, பயனர்கள் நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சத்தை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி பொக்கே கேமரா வசதியோடு வருகிறது. விவோவின் இந்த விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை உள்சேமிப்பு வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு என 1டிபி வரை விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளுக்கு என 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1 மற்றும் எஃப்எம் ரேடியோ ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் யூஎஸ்பி டைப்-சி ஆதரவை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Launched its Vivo Y75 5G Smartphone in India With 8GB RAM, 50MP Triple Rear Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X