பெயரை கூட அறிவிக்காமல் 'லைசன்ட்' ஆக வேலை பார்த்த விவோ.!

Written By:

வருகிற நவம்பர் 20-ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெயரை கூட அறிவிக்காமல் 'லைசன்ட்' ஆக வேலை பார்த்த விவோ.!

கிடைக்கப்பெற்றுள்ள அழைப்பிதழ் ஆனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலின் பார்வையை காட்டுகிறது. படத்தின்படி கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு உலோக விளிம்பு காட்டுகிறது, அது விவோ வி7 ப்ளஸ் கருவியில் பார்க்கப்பட்ட ஆண்டெனா பட்டைகலாய் நினைவுப்படுத்துகிறது.

அதன் கைரேகை சென்சார் அம்சமானது ஸ்மார்ட்போனின் மையத்தில் வைக்கப்படலாம். நவம்பர் 20 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்மார்ட்போன் - என்ன ஸ்மார்ட்போன்.? என்ன பெயர் போன்ற எந்தவொரு விவரமும் இல்லை. எனவே, நாம் அனைவரும் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

சமீபத்தில் விவோ வி7ப்ளஸ் ஸ்மார்ட்போனின் எனர்ஜிடிக் ப்ளூ மாறுபாடு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில், வெளியான வி7ப்ளஸ் கருவியானது ரூ.21,990/- என்ற விலை நிர்ணயத்துடன் மேட் பிளாக் மற்றும் சாம்பெயின் கோல்ட் ஆகிய வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தபட்டது.

பெயரை கூட அறிவிக்காமல் 'லைசன்ட்' ஆக வேலை பார்த்த விவோ.!

தற்போது வெளியாகியுள்ள எனர்ஜிடிக் ப்ளூ மாறுபாடானது நவம்பர் 10 முதல் 14 வரை அமேசான் இந்தியாவில் வாங்க கிடைக்கும் நவம்பர் 15 முதல் விற்பனையை தொடங்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக, எப் / 2.0, பேஸ் பியூட்டி 7.0, வீடியோ கால் பேஸ் பியூட்டி மோட், க்ரூப் செல்பீ மற்றும் போட்ரியட் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய அதன் 24 மெகாபிக்சல் மூன்லைட் கேமரா திகழ்கிறது. ரியர் கேமராவை பொறுத்தமட்டில், பிடிஏஎப், பாஸ்ட் போகஸ், எப் / 2.0 மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.English summary
Vivo to launch a new smartphone on November 20 in India. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot