Home
Mobile

சிறந்த தரம் கொண்ட ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்யும் விவோ நிறுவனம்.!

கடந்த 2012-ம் ஆண்டு விவோ எக்ஸ்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனில் தான் அதிநவீன ஆடியோ வசதி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது விவோ நிறுவனம், அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிக மெகாபிக்சல் மற்றும் அதிநவீன டிஸ்பிளே வடிவமைப்புடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது விவோ நிறுவனம். பின்பு ஆடியோ, மென்பொருள், கேமிங் போன்ற அனைத்திலும் சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது இந்நிறுவனம்.

சிறந்த தரம் கொண்ட ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்யும் விவோ நிறுவனம்.!

கடந்த சில ஆண்டுகளில் விவோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, குறிப்பாக ஸ்மார்ட்போனின் விளிம்பில் கூட பல்வேறு புதிய டிசைன்களை கொண்டுவந்துவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். சமீபத்தில் வெளிவந்த விவோ ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 சிறந்த ஆடியோ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்:

சிறந்த ஆடியோ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்:

கடந்த 2012-ம் ஆண்டு விவோ எக்ஸ்1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனில் தான் அதிநவீன ஆடியோ வசதி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஸ்மார்ட்போன்களை
விட சிறந்த சவுண்ட் சிஸ்டம் கொண்டு வெளிவந்ததால் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்1 ஸ்மார்ட்போன் உடன் வெளிவந்த எம்எம்இ 71 ஐஇ என்ற இயர்போன் கூட சிறந்த ஆடியோ அம்சத்தை வழங்கியது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் ஆடியோ வசதிக்கு தகுந்தபடி இடம்பெற்றது.

உலகின் முதல் 2கே டிஸ்பிளே:

உலகின் முதல் 2கே டிஸ்பிளே:

உலகின் முதல் 2கே டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டது இந்த விவோ எக்ஸ்பிளே 3எஸ் என்ற சாதனம் தான். இந்த ஸ்மார்ட்போன் சிறந்த டிஸ்பிளே பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் விவோ எக்ஸ்பிளே 3எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எல்சிடி 2கே எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு சாம்சங், எல்ஜி, சோனி போன்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த திரைவிகிதம் அடிப்படையில் இந்த எக்ஸ்பிளே 3எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீடியோ மற்றும் கேமிங் போன்ற அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

உலகின் முதல் மெல்லிய ஸ்மார்ட்போன்:

உலகின் முதல் மெல்லிய ஸ்மார்ட்போன்:

உலகின் முதல் மெல்லிய ஸ்மார்ட்போன் பெருமையை பெற்ற ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ்5 மேக்ஸ் சாதனம் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4.7எம்எம் தடிமன் வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 146கிராம் எடைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர்:

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர்:

விவோ நிறுவனம் 2018-ம் ஆண்டு மற்றொரு சிறந்த சாதனையைப் படைத்தது, அது என்னவென்றால் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது.

விவோ எக்ஸ்21 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனை செய்யப்படுவதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். தற்சமயம் பல்வேறு நிறுவனங்கள் இந்த இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

அல்ட்ரா -முழு எச்டி டிஸ்பிளே:

அல்ட்ரா -முழு எச்டி டிஸ்பிளே:

விவோ நிறுவனம் MWC 2018 நிகழ்ச்சியில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது,குறிப்பாக பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அதிகளவு அறிமுகம் செய்தது.பின்பு பாப்-அப் கேமரா கொண்ட விவோ சாதனங்கள் கடந்த ஆண்டு அதிகளவு விற்பனை செய்யப்பட்டது. பின்பு உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

கூடிய விரைவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், 5ஜி தொழில்நுட்பம் போன்ற அனைத்து வசதியையும் கொண்டு வரும்விவோ நிறுவனம். பின்பு சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்கள் கூட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பாப் அப் கேமரா:

பாப் அப் கேமரா:

விவோ நிறுவனத்தின் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பாப் அப் கேமரா அதிக வரவேற்பை பெற்றது, இந்த கேமரா குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க அருமையாக உதவுகிறது. பின்பு விரைவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களில் கூட பாப் அப் கேமரா இடம்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளிவரும் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் கூட பாப் அப் கேமரா இடம்பெறும் என அந்நிறவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீ கேமராக்களுக்கு கூட அதிக கவனம் செலுத்துகிறது இந்நிறுவனம்

அதிக மெகாபிக்சல் கொண்ட செல்பீ கேமரா:

அதிக மெகாபிக்சல் கொண்ட செல்பீ கேமரா:

அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, அந்தவகையில் விவோ நிறுவனமும் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. விரைவில் அறிமுகம் செய்யும் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் புதிய அம்சம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என அந்நிறவனம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக எதிர்பாரப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo is Leading the Next Wave of Smartphone Innovation: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X