இது என்ன காம்பினேஷன்? Vivo-வின் புதிய 5G Phone-ஐ பார்த்து மண்டையை சொரியும் ரசிகர்கள்!

|

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது விவோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விடத் தனித்துவமான அம்சங்கள் கொண்ட போனை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

 விவோ வி21எஸ் 5ஜி

விவோ வி21எஸ் 5ஜி

இந்நிலையில் விவோ நிறுவனம் புதிய விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தற்போது தைவானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய வரலாற்றில் முதல்முறை.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. "விண்ணில் பாயும் விக்ரம்" உற்று நோக்கும் உலக நாடுகள்- ரெடியா இருங்க!

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

Vivo V21s 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,404 x 1,080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?

 Dimensity 800U சிப்செட்

Dimensity 800U சிப்செட்

விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்தஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ போன்.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

Dark Blue மற்றும் Colorful

இந்த புதிய விவோ போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Dark Blue மற்றும் Colorful நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!

 44எம்பி கேமரா

44எம்பி கேமரா

குறிப்பாக விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி கேமராவுடன்
வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?

பேட்டரி எப்படி?

பேட்டரி எப்படி?

விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 5ஜி போன் என்றால் கண்டிப்பாக பேட்டரிக்கு தான் அதிக முக்கியம் கொடுக்கப்படும். ஆனால் இந்த போனில் பேட்டரி வசதிக்கு அப்படி முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சாதரணமாக 5ஜி-ஐ பயன்படுத்தும் போது விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது. எனவே இதுபோன்ற போன்களில் 5500 அல்லது அதற்கும் மேற்பட்ட பேட்டரியை வழங்கினால் தான் நன்றாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த விவோ போன் வெறும் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளதால் பயனர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

விவோ வி21எஸ் 5ஜி விலை?

விவோ வி21எஸ் 5ஜி விலை?

டூயல் சிம் ஆதரவு, 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை NTD 11,490 (இந்திய மதிப்பில் ரூ.30,000) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo introduced new 5G phone but it packs only 4000mAh battery Check other details about Vivo V21s 5G: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X