Home
Mobile

அம்புட்டு இந்தியாவும் அடிச்சு புடிச்சு வாங்க போகுது.. பக்கா பட்ஜெட்டில் புது VIVO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி!

விவோ (Vivo) நிறுவனம் தனது பட்ஜெட் விலை டி சீரிஸின் கீழ் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அது விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இது ஜூலை 16 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது

மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இது கடந்த ஆண்டு வெளியான விவோ டி4 லைட் (Vivo T4 Lite) ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மாடலாக (successor) இருக்கும். புதிய மாடல் ஆனது பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பெரிய பேட்டரி, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த அம்சங்களின் கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கா பட்ஜெட்டில் புது VIVO 5ஜி போன்.. 6500mAh பேட்டரி!

இது, இந்தியாவில் ஜூலை 16 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkart) மூலம் விற்பனை செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக தேதியை அறிவித்ததுடன், இந்த ஸ்மார்ட்பன் பேட்டர்ன்டு பினிஷ் (patterned finish) லைட் ப்ளூ மற்றும் டார்க் ப்ளூ ஆகிய 2 கலர்களில் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 44W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,500mAh பேட்டரி
- இராணுவத் தரத்திலான உறுதித்தன்மை
- தூசி மற்றும் நீர் புகாத IP65 தர சான்றிதழ்
- 120Hz டிஸ்பிளே
- அதிகபட்சமாக 1,200 நிட்ஸ் (nits) ப்ரைட்னஸ்

- மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்
- ஆரிஜின்ஓஎஸ் 6
- AI Creation, AI Captions, AI Transcript Assist, AI Documents மற்றும் Private Space போன்ற பல்வேறு AI அம்சங்கள்
- விலை: ரூ.15,999 - ரூ.17,999 க்குள் இருக்கலாம்.

8100mAh பேட்டரி விவோ ஸ்மார்ட்போன்: சமீபத்தில் விவோ நிறுவனம் ஆனது 8100mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை மிகவும் அமைதியான முறையில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.. இது விரைவில் இது இந்தியா உஉள்ளிட்ட மற்ற சந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. அது விவோ ஒய்500 (Vivo Y500) ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் விவோ ஒய்500, விவோ ஒய்500ஐ, விவோ ஒய்500எஸ் மற்றும் விவோ ஒய்500 ப்ரோ போன்ற விவோ ஒய்500 சீரிஸ் (Vivo Y500 Series) மாடல்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும், சீனாவிற்கு வெளியே அறிமுகமாகும் விவோ ஒய்500 சீரீஸின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

விவோ ஒய்500 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள்:
- 2800 x 1260 ரெசல்யூஷன் கொண்ட 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 449ppi பிக்சல் டென்சிட்டி
- 5000 நிட்ஸ் வரையிலான லோக்கல் பீக் பிரைட்னஸ்,
- 94.47 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- SGS லோ ப்ளூ லைட் மற்றும் SGSபைவ் ஸ்டார் சன்லைட் ரீடபிள் டிஸ்பிளே
- கேமிங் ஐ ப்ரொடெக்ஷன் (Gaming Eye Protection) வசதி

- யுனிசாக் டி7300 சிப்செட் (இது 4ஜி சிப்செட் ஆகும்; அதாவது இந்த மாடல் 5ஜி போன் அல்ல)
- 8GB ரேம் மற்றும் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ்
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8,100mAh பேட்டரி
- நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெப்பத்தை கட்டுப்படுத்த, இதில் 3,000mm² வேப்பர் சேம்பர் (vapor chamber) கூலிங் சிஸ்டம்

- Android 16-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ்
- இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 50 மெகாபிக்சல் Sony IMX852 ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

- ப்ளூடூத் 5.4, டூயல்-பேண்ட் வை-ஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி 2.0 போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்
- இரட்டை நானோ-சிம் ஆதரவு
- IP68 மற்றும் IP69 தரத்திலான நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன்
- MIL-STD-810H ராணுவத் தரத்திலான அதிர்வு எதிர்ப்பு திறன்

விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் விலை: இது பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34000 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும் போது இவ்வளவு அதிக விலைக்கு நிச்சயம் வராது. இந்தியாவில் இது அதிகபட்சம் ரூ.12,000-ரூ.16,000 பட்ஜெட் வரை செல்லலாம்.

Best Mobiles in India

English summary
Vivo India Launching New Budget Segment 5G Phone Vivo T5 Lite With 6500mAh Battery on July 16 12PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X