Home
Mobile

சீன கம்பெனியின் இந்திய பற்று.. ஆகஸ்ட் 15 அதிரடி ஆஃபர்.. 20க்கும் மேற்பட்ட VIVO போன்கள் மீது விலை குறைப்பு!

சீனாவை தளமாக கொண்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் கூட இந்தியாவின் 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை (2023 Independence Day) கொண்டாடும் நோக்கத்தின் கீழ் விவோ (Vivo) நிறுவனமானது ஒரு சிறப்பு சுதந்திர தின விற்பனையை அறிவித்து உள்ளது.

எனவே நீங்கள் ஒரு நல்ல விவோ ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்க காத்திருந்தால், அதற்கான சரியான நேரமாக இதுவாக இருக்கலாம். விவோ அறிவித்துள்ள சுதந்திர தின விற்பனையின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்களின் மீது என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. இதோ விவரங்கள்:

20க்கும் மேற்பட்ட VIVO போன்கள் மீது விலை குறைப்பு!

ஏற்கனவே தொடங்கி விட்ட விவோவின் 2023 சுதந்திர தின விற்பனையானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடக்குமென்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் விவோவின் எக்ஸ்-சீரிஸ், வி-சீரிஸ் மற்றும் ஒய்-சீரிஸின் கீழ் அறிமுகமான பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் கிடைக்கிறது.

முதலில் விவோவின் இந்த சுதந்திர தின சிறப்பு விற்பனையில் நீங்கள் தவறவிடவே கூடாத சில பிரபலமான ஸ்மார்ட்போன்களை பற்றியும், அவைகளின் மீது கிடைக்கும் சலுகைகளை பற்றியும் பார்த்துவிடலாம். பின்னர் விவோ சுதந்திர தின சிறப்பு விற்பனையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மொத ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி விலைகளை பார்க்கலாம்.

விவோ எக்ஸ்90 சீரீஸ் (Vivo X90 Series) மீதான சலுகைகள்: ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஒன்கார்டு கார்டு வழியாக விவோ எக்ஸ்90 ப்ரோ மாடலை வாங்கினால் ரூ.10,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை எஸ்பிஐ மூலம் எக்ஸ்90 ப்ரோவை வாங்கினால் ரூ.8,500 கேஷ்பேக் கிடைக்கும்.

நீங்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனை கேஷிஃபை ஆப் மூலம் வாங்கினால், உங்களுக்கு பிரத்தியேகமாக ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். விவோ எக்ஸ்90 மீதான சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் மற்றும் ஒன்கார்டு கார்டு வழியிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,000 கேஷ்பேக் கிடைக்கும்.

விவோ வி27 சீரீஸ் மீதான சலுகைகள்: ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடாக் ஒன்கார்டு ஃபெடரல், பேங்க் ஆஃப் பரோடா, யெஸ் பேங்க் வழியாக விவோ வி27 ப்ரோ மாடலை வாங்கினால் ரூ.3,500 கேஷ்பேக் கிடைக்கும். மேற்கூறிய அதே பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வெண்ணிலா வேரியண்ட் ஆன விவோ வி27 மாடலை வாங்கினால் ரூ. 2,500 கேஷ்பேக் கிடைக்கும்.

விவோ ஒய்100 மற்றும் விவோ ஒய்100ஏ மீதான சலுகைகள்: ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஒன்கார்டு, கோடக், ஐடிஎஃப்சி, பெடரல், பேங்க் ஆஃப் பரோடா, யெஸ் பேங்க் வழியாக விவோ ஒய்100 மற்றும் விவோ ஒய்100ஏ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.2,000 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு என்னென்ன ஒய்-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? விவோ வி21இ 5G ஆனது ரூ.24,990 க்கு வாங்க கிடைக்கும்; இதே போல விவோ ஒய்12ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,990 க்கு க்கு வாங்க கிடைக்கும். விவோ ஒய்53எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,490 க்கு வாங்க கிடைக்கும்.

விவோ ஒய்20ஏ (2021) ரூ. 11,990 முதல் கிடைக்கும். விவோ ஒய்72 5ஜி ரூ. 20,990 முதல் கிடைக்கும். விவோ ஒய்51ஏ ரூ.17,990 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ ஒய்12எஸ்: ரூ.10,990 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ ஒய்31: ரூ. 16,490 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக விவோ ஒய்20ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது

வேறு என்னென்ன எக்ஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? விவோ எக்ஸ்90 சீரிஸ் மாடல்களை தவிர்த்து விவோ எக்ஸ்60 ப்ரோ மாடலானது ரூ.49,990 க்கு வாங்க கிடைக்கும். விவோ எக்ஸ்60 மாடலானது ரூ.37,990 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.36,990 க்கு வாங்க கிடைக்கும்.

வேறு என்னென்ன வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? விவோ வி27 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து விவோ வி20 எஸ்இ ஆனது ரூ.19,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல விவோ வி20 ஆனது ரூ.21,990 க்கு வாங்க கிடைக்கிறது; விவோ வி21 5ஜி ஆனது ரூ.29,990 க்கும், கடைசியாக விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Independence Day Sale Offer List of X series V series Y series Smartphones Gets Discounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X