விவோ கிராண்ட் தீபாவளி ஆஃபர் : ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

|

விவோ நிறுவனம் விவோ கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் ஆஃபர்(vivo Grand Diwali Fest Offers) எனும் தலைப்பில் பல்வேறு புதிய விவோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை அக்டோபர் 11-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு கண்டிப்பாக பல்வேறு மக்கள் குறைந்த விலையில விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ இசெட்1 ப்ரோ

விவோ இசெட்1 ப்ரோ

கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் ஆஃபரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மையான ஸ்மார்ட்போன்கள் எனப்படும் விவோ இசெட்1 எக்ஸ் மற்றும் விவோ இசெட்1 ப்ரோ, விவோ வி15 மற்றும் விவோ யூ10 ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அனைத்தும் சிறந்த கேமரா மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ இசெட்1 ப்ரோ
விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். 4ஜிபி ரேம மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக
இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு
விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 712எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு பப்ஜி கேம் மற்றும பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தான்
கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் பயனர்கள் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ இசெட்1 ப்ரோ சாதனத்தை வாங்க விரும்பினால்
மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு விலை இல்லாத ஈ.எம்.ஐ சலுகைகளையும் நீங்கள் கோரலாம்.

இது தவிற விவோ இசெட்1 ப்ரோ வாங்கும்போது இலவச செல்பி ஸ்டிக்கையும் பெறலாம், பின்பு இந்த mobile cases-க்கு ரூ.300-வரை தள்ளுபடி பெற முடியும். குறிப்பாக மொபைல் வழக்குகளுக்கான தள்ளுபடி கூப்பன்கள் டெய்லிஆப்ஜெக்ட்ஸ்.காமில்
செல்லுபடியாகும்.

விவோ இசெட்1எக்ஸ்

விவோ இசெட்1எக்ஸ்

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.39-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்கிற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் சாதனம் ரூ.16,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது,அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ் சாதனம் ரூ.18,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்சமயம் விவோ நிறுவனம் இந்த சாதனத்திறக்கு ரூ.2000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கியுள்ளது. பின்பு இஎம்ஐ வசதி உள்ளிட்ட சலுகைகளும் வழங்கியுள்ளது விவோ நிறுவனம். மேலும் விவோ இசெட்1எக்ஸ் வாங்குபவர்களுக்கு இலவச செல்பி ஸ்டிக் வழங்கப்படும். குறிப்பபக விவோ இசெட்1எக்ஸ் mobile cases-க்கு ரூ.300-வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

விவோ வி15 ஸ்மார்ட்போன்

விவோ வி15 ஸ்மார்ட்போன்

இந்த வருடம் மார்ச் மாதம் விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.23,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இவற்றுள் அடக்கம். பின்பு பாப்-அப் செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி15 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2340×1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி70சிப்செட் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ யூ10

விவோ யூ10

விவோ யூ10 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ யூ10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 18வாட் சார்ஜர் ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பேட்டரி பற்றிய கவலை இருக்காது.

விவோ கிராண்ட் தீபாவளி ஆஃபர் மூலம் இந்த விவோ யூ10 சாதனத்தை நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை மூலம் வாங்க முடியும், பின்பு இந்த சாதனத்துடன் செல்பி ஸ்டிக் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக mobile cases-க்கு ரூ.300-வரை சலுகை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
vivo Grand Diwali Fest Offers: Exciting Discounts on vivo Z1x, Z1 Pro, U10 and V15: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X