மற்றொரு இரண்டு மாடலா: கொஞ்சம் கூட கேப் விடாம சாதனங்கள் அறிமுகம் செய்யும் விவோ!

|

இரண்டு புதிய மாடல் விவோ ஸ்மார்ட்போன்கள் டீனா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஒன்று பட்ஜெட் விலைப்பிரிவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்

விவோவின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் டீனா சான்றிதழ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பட்டியலில் காணப்பட்ட எண் குறித்து பார்க்கையில், V2069A உடன் இரட்டை சிம் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் அதேபோல் V2066A மாதிரி எண் கொண்ட ஸ்மார்ட்போன் இரட்டை 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்று பட்ஜெட் மாடலாக இருக்கும்

ஸ்மார்ட்போன்களின் ஒன்று பட்ஜெட் மாடலாக இருக்கும் எனவும் கசிந்த விவரக்குறிப்புகள்படி இதன் V2066A செவ்வக வரிசைகளில் மூனறு பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் V2066A எண் கொண்ட சாதனம் இரட்டை பின்புற கேமரா வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. இந்த தகவல் டீனா பட்டியல் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

V2069A சிறப்பம்சங்கள்

V2069A சிறப்பம்சங்கள்

V2069A சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) எல்சிடி பேனல் உடன் வரும் என கூறப்படுகிறது. இது அறியப்படாத 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனிில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா வரும் எனவும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4910 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என கூறப்படுகிறது.

V2066A சிறப்பம்சங்கள்

V2066A சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு உள்ளிட்ட அமைப்போடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனத்திலும் 4910 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்

புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஏப்ரல் 27-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி

இந்த புதிய விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மாரட்போன் வெளிவரும். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போன். விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo Going to Ready to Launch Two Smartphone: Listed by Teena

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X