Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் சத்தமின்றி தனது விவோ ஜி3 5ஜி (Vivo G3 5G) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ ஜி3 5ஜி அம்சங்கள் (Vivo G3 5G Specifications): 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமராவுடன் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

எஸ்ஜிஎஸ் ஃபைவ் ஸ்டார் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (SGS Five-Star Drop Resistance) பெற்றுள்ளது விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 15 (OriginOS 15) மூலம் இந்த புதிய விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனின் எடை 204 கிராம் ஆகும்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யூஎஸ்பி 2.0 போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளது.

ஆனால் விவோ ஜி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த விவோ போனின் ஆரம்ப விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.18,300) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo G3 5G launched with Dimensity 6300 chipset: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X