Home
Mobile

வெறும் ரூ.13,999 போதும்.. LCD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது முதல் ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தற்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஜி2 ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ ஜி2 அம்சங்கள் (Vivo G2 specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1612 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வெறும் ரூ.13,999 போதும்.. அறிமுகமானது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6020 சிப்செட் (Dimensity 6020 chipset) வசதியுடன் இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் டைமன்சிட்டி 6020 சிப்செட். பின்பு Origin OS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் விவோ ஜி2 மாடல் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ ஜி2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேடடரியை சார் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங் (15W charging) ஆதரவும் உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதி இந்த போனில் உள்ளது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் ( 3.5mm audio jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ ஜி2 ஸ்மார்ட்போன். கருப்பு நிறத்தில் மட்டுமே தற்போது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ ஜி2 ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.13,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo G2 with Dimensity 6020, 90Hz display launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X