Home
Mobile

48எம்பி கேமராவுடன் விவோ ஜி1ஸ்மார்ட்போன் அறிமும்.! விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.!

விவோ நிறுவனம் சீனாவில் தனது புதிய விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

2340 x 1080 பிக்சல் திர்மானம்

விவோ ஜி1 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED HDR10 டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

க்ஸிநோஸ் 980எஸ்ஒசி சிப்செட்

இந்த விவோ ஜி1 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் எக்ஸிநோஸ் 980எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

32எம்பி செல்பீ கேமரா

விவோ ஜி1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி டூயல் செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 8ஜிபி ரேம் மற்றும்

விவோ ஜி1 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருiயாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங்

விவோ ஜி1 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 18வாட் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்

5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஜி ஸ்மார்ட்போனின் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ ஜி1 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 3498யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,500) ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo G1 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X