Home
Mobile

சூடுபிடிக்கும் தீபாவளி.. புதுசு பழசுனு பார்க்காம பல VIVO போன்கள் மீது அபார தள்ளுபடி.. என்னென்ன மாடல்கள்?

2023 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கால சலுகைகளின் ஒரு பகுதியாக, விவோ (Vivo) நிறுவனமானது தனது பிராண்டின் கீழ் வாங்க கிடைக்கும் பல ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகள் மற்றும் நம்பமுடியாத நேரடி தள்ளுபடிகளை அறிவித்து உள்ளது.

விவோவின் இந்த தீபாவளி சலுகைகள் (Vivo Diwali Offer) ஆனது எப்போது தொடங்கியது? எந்த தேதியில் முடிவடைய உள்ளது? இந்த தீபாவளி சலுகையின் கீழ் என்னென்ன விவோ ஸ்மார்ட்போன்களின் மீது என்னென்ன சலுகைகள், எவ்வளவு தள்ளுபடிகள் கிடைக்கிறது? போன்ற விவரங்கள் இதோ:

புதுசு பழசுனு பார்க்காம பல VIVO போன்கள் மீது அபார தள்ளுபடி!

எப்போது தொடங்கியது.. எப்போது முடிவடையும்? விவோ அறிவித்துள்ள இந்த தீபாவளி சலுகையானது ஏற்கனவே (நவம்பர் 1 ஆம் தேதி முதல்) நேரலையில் உள்ளது. ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக அணுக கிடைக்கும் இந்த சலுகைகள் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கும்.

என்னென்னெ ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கிறது? விவோ எக்ஸ்90 சீரீஸின் (Vivo X90 Series) கீழ் வாங்க கிடைக்கும் விவோ எக்ஸ்90 (Vivo X90) மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro) ஆகிய இரண்டிற்குமே ரூ.10,000 வரையிலான கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கிறது.

புதுசு பழசுனு பார்க்காம பல VIVO போன்கள் மீது அபார தள்ளுபடி!

இதேபோல விவோ வி29 சீரீஸின் (Vivo V29 Series) கீழ் வாங்க கிடைக்கும் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ICICI, SBI, HSBC, Yes Bank, Bank of Baroda, IDFC First Bank அல்லது OneCard கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும்.

விவோ வி29 சீரீஸ் மாடல்கள் மீது ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் (Exchange Offer) அணுக கிடைக்கிறது. இதை பயன்படுத்தி விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) மாடல்களின் விலைகளை இன்னும் குறைக்க முடியும்.

புதுசு பழசுனு பார்க்காம பல VIVO போன்கள் மீது அபார தள்ளுபடி!

விவோ நிறுவனத்தின் சில ஒய்-சீரிஸ் மாடல்களுக்கும் கூட கேஷ்பேக் சலுகைகள் அணுக கிடைக்கிறது. விவோ ஒய்200 (Vivo Y200) மீது ரூ.2500 வரையிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. இதேபோல விவோ ஒய்56 (Vivo Y56) மற்றும் விவோ வி27 (Vivo Y27) ஆகியவைகள் மீது ரூ.1000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கிறது.

மேற்கண்ட கேஷ்பேக் சலுகைகளை பெற ICICI, SBI, Kotak Mahindra, OneCard அல்லது AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்கண்ட விவோ ஒய்-சீரிஸ் மாடல்களை தவிர்த்து வேறு சில ஒய்-சீரீஸ் மாடல்களை வாங்கும் போதும் கூட கேஷ்பேக்குகளை பெறலாம் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேஷ்பேக் சலுகைகள் தவிர, மேற்கூறிய அனைத்து மாடல்களும் - விவோ ஒய்27 தவிர - ரூ.101 முதல் என்கிற ஈஸி இஎம்ஐ விருப்பத்தின்கீழ் வாங்க கிடைக்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த தீபாவளி சலுகையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே விவோ வி-ஷீல்ட் திட்டங்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும்.

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனின 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.59,999 ஆகும். விவோ எக்ஸ்90 ப்ரோவின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.84,999 ஆகும்.

விவோ வி29 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.32,999 ஆகும், மறுகையில் உள்ள விவோ வி29 ப்ரோ மாடலின் விலை ரூ.39,999 ஆகும். விவோ ஒய்200 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.21,999 ஆகும். கடைசியாக விவோ ஒய்56 மற்றும் விவோ ஒய்27 மாடல்களின் விலை முறையே ரூ.19,999 மற்றும் 14,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Diwali Offer ends Nov 15 Cashback X90 V29 Y Series Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X