மார்ச் 14-ல் அறிமுகம்.. பலே விலையில் புதிய Vivo 5G போன்..12GB ரேம், 50MP கேமரா, 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அதன் டி சீரீஸின் கீழ் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில் அதன் ஒய் சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. அது விவோ ஒய்300ஐ 5ஜி (Vivo Y300i 5G) ஸ்மார்ட்போனாகும்
இது வருகிற மார்ச் 14 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மார்ச் 12 ஆம் தேதி முதல் தான் விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆரம்பிக்கிறது. ஆகையால், விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உடனடியாக நடக்காது; ஆனால்நிச்சயம் நடக்கும்.இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபால் ரெசிஸ்டென்ட்-க்கான (Fall Resistant) டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் ஸ்க்ரீனை கொண்டுள்ளது. கூடவே இது ஸ்லிம் ஆன மற்றும் லைட் ஆன ட்டமைப்பை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த போஸ்டர் வழியாக, இது நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரைம் ப்ளூ கலர் ஆப்ஷனில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே இது பிளாக் மற்றும் டைட்டானியம் கலர் ஆப்ஷன்களிலும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆக இது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்
விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.18,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி வகைகளிலும் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.68-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரைகொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ்5 உடன் அனுப்பப்படலாம்.
கேமராவை பொறுத்தவரை, விவோ ஒய்300ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம். இதில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது; ஆனால் நிச்சயமாக இதைவிட அதிகம் எதிர்பார்க்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 6,500mAh பேட்டரியுடன் வரலாம். கடைசியாக இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விவோ டி4எக்ஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
6ஜிபிரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.13,999
8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.14,999
8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.16,999
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற மார்ச் 12 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும்.
விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்
- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.


Click it and Unblock the Notifications








