6500mAh பேட்டரி உடன் Vivo-வின் Mini போன்.. OnePlus 13s க்கு வெடி வைக்கும் விலை.. ஜூன் 30 அறிமுகம்?
திடீரென பிரபலமாகி கொண்டிருக்கும் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Compact Flagship Smartphone) பிரிவிற்குள் - விவோ நிறுவனம் நுழைகிறது. இந்நிறுவனம் அதன் விவோ எக்ஸ்200 சீரீஸின் (Vivo X200 Series) கீழ் விவோ எக்ஸ்200 எப்இ (VivoX200 FE) என்கிற புதிய மாடலை கூடிய விரைவில் (இம்மாதம்) உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது முன்னதாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எஸ்30 ப்ரோ மினி (Vivo S30 Pro Mini) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

விவோ எக்ஸ்200 எப்இ வெளியீட்டு தேதி: பராஸ் குக்லானி (Paras Guglani - @passionategeekz) என்கிற டிப்ஸ்டரின் கூற்றுப்படி, விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு (Vivo X200 FE Global Launch Date) வருகிற ஜூன் 30 ஆம் தேதி நடக்கலாம். இருப்பினும் விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை
விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியுடன் சேர்த்து இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் (Retail Box) படமும் லீக் ஆகியுள்ளது. கூறப்படும் ரீடெயில் பாக்ஸ் படத்தின்படி, விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமான விவோ எஸ்30 ப்ரோ மினி மாடலை போலவே பிளாக், ப்ளூ, யெல்லோ மற்றும் பிங்க் ஆகிய கலர்களில் காணப்படுகிறது.

விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Vivo X200 FE Specifications Expected)? டிஸ்பிளேவை பொறுத்தவரை விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 10 பிட் கலர் டெப்த் உடனான 6.31-இன்ச் LTPO OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீக்பென்ச் (Geekbench) பட்டியலின்படி, விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கிள்-கோர் சோதனையில் 2,087 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 6,808 புள்ளிகளையும் எட்டியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள்ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சோனி IMX921 சென்சார் உடனான ப்ரைமரி கேமரா, 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம்.
முன்பக்கத்தில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6500mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Vivo X200 FE Price in India Expected)? விலையை பொறுத்தவரை இந்தியாவில் விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பில்ஸ் 13எஸ் (OnePlus 13s) உடன் நேரடியாக போட்டியிடலாம்.
நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட்களுமே பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது. Photo Courtesy: Paras Guglani - @passionategeekz


Click it and Unblock the Notifications