Vivo Christmas Carnival:விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
விவோ நிறுவனம் Vivo Christmas Carnival எனும் தலைப்பில் பல்வேறு விவோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த அதிரடி சலுகை வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை மட்டுமே விவோ இ-ஸ்டோர் தளத்தில் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Z1 Pro
அதன்படி அனைவரும் எதிர்பார்த்த விவோ Z1 Pro மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட விவோ Z1 Pro மாடல் ரூ.12,990-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட விவோ Z1 Pro மாடல் ரூ.13,990விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் விவோ Z1x மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேஷ்பேக் சலுகை, இஎம்ஐ வசதி
மேலும் விவோ U10 (32ஜிபி, 64ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,490 மற்றும் 8,990-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அசத்தலான விவோ வி17, விவோ வி17ப்ரோ, விவோ வி15ப்ரோ, விவோ எஸ்1, விவோ வ்யை91 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகை, இஎம்ஐ வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விவோ U10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ U10 டிஸ்பிளே
விவோ U10 ஸ்மார்ட்போனில் 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

விவோ U10 சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ U10 கேமரா
விவோ U10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ U10 பேட்டரி
விவோ U10 ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் 18வாட் பாஸ்ட் சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளது, பின்புடூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை,மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications