Home
Mobile

VIVO-வின் பழைய வேட்டைக்காரன்.. 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மீண்டும் லான்ச் ஆகும் விவோ S-சீரீஸ் போன்!

ஒருவழியாக, நீண்ட காலமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாமலேயே இருந்த விவோ எஸ்-சீரிஸ் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் விவோ எஸ்2 (Vivo S2) ஸ்மார்ட்போன் ஆனது பிஐஎஸ் (BIS) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.

பொதுவாக பிஐஎஸ் என்கிற இந்தியத் தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) தளத்தில் சான்றிதழை பெறும் ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் உடனடி அறிமுகத்தை காணும். ஆக விவோ நிறுவனம் அதன் புதிய எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதற்கான முதல் அதிகாரப்பூர்வ அறிகுறி இதுவாகும்.

இந்தியாவில் மீண்டும் லான்ச் ஆகும் விவோ S-சீரீஸ் போன்!

இந்தியாவில் கடைசியாக எஸ்-சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2019 இல் அறிமுகமான விவோ எஸ்1 (Vivo S1) தான் இந்த சீரீசின் கீழ் இந்தியாவில் அறிமுகமான கடைசி மாடலாகும்; இது ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைத்த ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. அதாவது விவோ எஸ்2 நிச்சயமாக ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் ஆகாது.

விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை: துறைசார் வட்டாரங்கள் பகிர்ந்துகொண்ட முந்தைய தகவல்களின்படி, இந்தியாவில் விவோ எஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஒரிஜினல் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் இருந்து இது ஒரு பெரிய மாற்றமாக அமையும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சப்-பிளாக்ஷிப் (sub-flagship) பிரிவில், அதாவது விவோவின் பிரபலமான வி சீரிஸ்-க்கு அடுத்த நிலையில் அமரும். இந்த விலை வரம்பில், விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R), ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மற்றும் விவோவின் சொந்த விவோ வி70 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடலாம்.

விவோ எஸ்2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? புகைப்படம் எடுத்தல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு விவோ எஸ்2 ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக அமையலாம், ஏனெனில் இந்நிறுவனம் இவ்விரு அம்சங்களிலும் கவனம் செலுத்துவதில் பெயர் பெற்றது.

இருப்பினும், துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் (அம்சங்கள்) இன்னும் தெரியவில்லை; கூடுதல் சான்றிதழ்கள் மூலமாகவோ அல்லது விவோ நிறுவனத்திடமிருந்தோ விரைவில் அந்த விவரங்களை நாம் அறியலாம். பிளாக்ஷிப்-தரத்திலான ப்ராசஸர்கள் (processors) அல்லது கேமிங் சார்ந்த வன்பொருளை (hardware) எதிர்பார்ப்பவர்கள், விவோ எஸ்2 மாடலை வாங்குவது குறித்த முடிவை எடுப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பது நல்லது.

இதுவொருபக்கம் இருக்க விவோ (Vivo) நிறுவனமானது விரைவில் அதன் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அது விவோ ஒய்500 4ஜி (Vivo Y500 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய சிறப்பம்சங்களையும் விவோ வெளிப்படுத்தியுள்ளது.

கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தரவுத்தளத்தில் இந்த போன் காணப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த அறிமுக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த டீசர்களை (teasers) விவோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் வெளியிட தொடங்கியுள்ளது. நேபாளத்தை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவில் விவோ ஒய்-சீரீஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் - நாம் இதன் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

விவோ வெளியிட்டுள்ள டீசர்கள் ஆனது, விவோ ஒய்500 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே இன்பினிட்டி அமோஎல்இடி (Infinity AMOLED) டிஸ்பிளே மற்றும் 8100mAh ப்ளூவோல்ட் (BlueVolt) பேட்டரியை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சரியான அறிமுக தேதியை விவோ நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ப்ரோமோஷனல் போஸ்ட்கள் ஆனது இதன் அறிமுகம் வெகு விரைவில் இருக்கலாம் என்பதை குறிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Vivo Bring back Its S Series Smartphone to India After 7 Years Gap Vivo S2 Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X