Home
Mobile

VIVO வச்சி செஞ்சிட்டான்.. முரட்டு காம்பினேஷனில் புது போன்.. 7000mAh பேட்டரி, 200MP Zeiss கேமரா, IP69 ரேட்டிங்!

விவோ நிறுவனம் அடுத்த மாதம் (மார்ச்) சீனாவில் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா, விவோ எக்ஸ்300 மேக்ஸ், விவோ பேட் 6 ப்ரோ மற்றும் நிறுவனத்தின் முதல் வ்லோக்கிங் கேமரா (Vlogging Camera) போன்ற பல டிவைஸ்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இவற்றில், விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ பேட் 6 ப்ரோ ஆகியவைகள் ஏற்கனவே சீனாவின் 3சி சான்றிதழ் தளத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்போது, ​விவோ எக்ஸ்300 ​மேக்ஸ் மாடலும் 3சி தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் வழியாக - அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கியமான அம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

VIVO வச்சி செஞ்சிட்டான்.. முரட்டு காம்பினேஷனில் புது போன்!

விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள புதிய விவரங்களின் படி, விவோ எக்ஸ்300 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் LTPO OLED பேனல் உடனான பிளாட் டிசனன் டிஸ்பிளே இடம்பெறலாம். இது 1.5K ரெசல்யூஷனையும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கும். பாதுகாப்பிற்காக, இது ஒரு அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்300 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, ஒரு அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் மேக்ரோ திறன்களைக் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய வட்ட வடிவ கேமரா மாட்யூலுக்குள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இது Zeiss உடன் இணைந்து உருவாக்கப்பட்ட மற்றும் ஒரு புதிய ஆப்டிகல் அமைப்பாகவும் இருக்கும்

இதுதவிர்த்து விவோ எக்ஸ்300 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது Android 16 ஓஎஸ் அடிப்படையிலான OriginOS 6 உடன் அனுப்பப்படும். சிப்செட்டை பொறுத்தவரை இது Dimensity 9500 உடன் வரும். பேட்டரியை பொறுத்தவரை இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது IP68/69 ரேட்டிங்கையும் பெறலாம்.

முன்னதாக அறிமுகமான விவோ எக்ஸ்300, விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,43,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி உடனான ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.1,13,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா

- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்

- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Biggest 2026 March Event Vivo X300 Max To launch With Other Products Including First Vlog Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X