16எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தும் விவோ வ்யை75.!

Written By:

விவோ நிறுவனம் மிகவும் அமைதியாக அதன் புதிய வ்யை - தொடர் வரிசையில் வ்யை75 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் விவோ வ்யை75 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

விவோ வ்யை75 ஸ்மார்ட்போன் பொதுவாக பெரிய டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும், அதன்பின் இந்த வ்யை 75 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ வ்யை75 ஸ்மார்ட்போன் மாடல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விவோ வ்யை75:

விவோ வ்யை75:

விவோ வ்யை75 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரை
விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என விவோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

விவோ வ்யை75 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 16எம்பி செல்பீ கேமரா:

16எம்பி செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் வைட் ஆங்கில் லென்ஸ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என விவோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

வ்யை75 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என விவோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 விலை:

விலை:

விவோ வ்யை75 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.16,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Vivo adds Y75 to its portfolio offers 16MP selfie camera and FullView display ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot