Home
Mobile

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் Vivo 5ஜி போன்கள்.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. எந்தெந்த மாடல்?

இந்தியாவில் சியோமி, ஒப்போ, மோட்டோ போன்களை விட விவோ நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு, தரமான அம்சங்களுடன் விவோ போன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் விவோ 5ஜி போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த 5ஜி போன்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 விலையில் வாங்கவிட முடியும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ மாடல்.

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் Vivo 5ஜி போன்கள்.. எந்தெந்த மாடல்?

அதேபோல் விவோ டி3எக்ஸ் 5ஜி போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி, 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 4கே வீடியோ பதிவு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) போன் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.10,499-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடி உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும். ஆனாலும் இந்த போன் வரும் ஜூலை 4-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

குறிப்பாக விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் Vivo 5ஜி போன்கள்.. எந்தெந்த மாடல்?

விவோ ஒய்28 5ஜி (vivo Y28 5G) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13249 விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6.56-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 5000எம்எஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட், 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஒய்28 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo 5G Phones Under Rs 15000 in India: Here's the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X