Home
Mobile

பட்டைய கிளப்பும் விவோ.. சோனி கேமரா.. 512ஜிபி மெமரி.. இரண்டு 5ஜி போன்கள் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ 30 சீரிஸ் (Vivo V30 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது பிளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக விவோ 30 மற்றும் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவோ வி30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

பட்டைய கிளப்பும் விவோ.. சோனி கேமரா.. இரண்டு 5ஜி போன்கள் ரெடி.

விவோ வி30 ப்ரோ அம்சங்கள் (Vivo 30 Pro specifications): டைமன்சிட்டி 8200 சிப் ( Dimensity 8200 chip) வசதியுடன் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபன்டச் 14 ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.78-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (FHD+ AMOLED ) டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளேவில் 1,260x2,800 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 2800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விவோ வி30 ப்ரோ போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் உள்ளன. அதேபோல் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன், வளைந்த டிஸ்பிளே, ஆரா லைட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

இந்த விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) பிரைமரி கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 sensor)அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவரும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த விவோ போன் வெளிவரும்.

பட்டைய கிளப்பும் விவோ.. சோனி கேமரா.. இரண்டு 5ஜி போன்கள் ரெடி.

5000எம்ஏஎச் பேட்டரி வசதி விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ வி30 ப்ரோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் விவோ வி30 ஸ்மார்ட்போன் கூட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக விவோ வி30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு போன்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: Flipkart

Best Mobiles in India

English summary
Vivo 30 Series Teaser Released by Flipkart Microsite: India Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X