Home
Mobile

Virat Kohli பயன்படுத்திய 5ஜி போன் இதுதான்..!

அன்மையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போன் பேசுவது போல இஎஸ்பிஎன்க்ரிக்இன்போ ட்வீட்டர் தளம் புகைப்படம் ஒன்றை வெளயிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த புகைப்படத்தை மையமாக கொண்டு சுமார்
நான்கு நிமிடங்களுக்கும் மேலாக நீளும் ஒரு வீடியோவை யூட்யூப் தளமான ரேவ்அட்லாஸ் வெளயிட்டுள்ளது.

 iQoo ப்ரோ 5ஜி

iQoo ப்ரோ 5ஜி

குறிப்பாக அந்த புகைப்படத்தில் கோலி பயன்படுத்தி அந்த ஸ்மார்ட்போன் அறிமுகமே ஆகாத ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்ஆகும். ஆனால் வெளியான தகவலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo ப்ரோ 5ஜி பதிப்பாக இருக்கக்கூடும் என்று வீடியோ வழியாக விவரிப்பாளர் குறிப்பிடுகிறார். இருப்பினும் புகைப்படத்தில் காணப்படுவது கடந்த ஆண்டு வெளியான மாடலுடன் ஒற்றுபோகவில்லை. ஏனெனில் அது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் SoC ப்ராசஸரைகொண்டு இயங்கும் மாடல் ஆகும்.

விராட் கோலி கைகளில்

மேலும் iQoo நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பானடீசர்களை வெளியிட்டு வருகிறது. இந்த பிராண்ட் இந்தியாவிற்குள் வருவதாக அறிவித்த சில வாரங்களிலேயே 5ஜி
ஸ்மார்ட்போன் ஒன்று விராட் கோலி கைகளில் சிக்கியுள்ளது.

பிரத்யேக பட்டன்

பிரத்யேக பட்டன்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் புதிய iQoo ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்திற்கு பிரத்யேக பட்டன் கொண்டுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2400 x 1080 பிக்சல்கள் அளவிலான ஸ்க்ரீன் ரெசல்யூஷன், ஸ்டாண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல ஆதரவுகளுடனும் இந்த ஸமார்ட்போன் வெளிவரும்.

4410எம்ஏஎச் பேட்டரி

4410எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக புதிய iQoo ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே இடம்பெறும் என்பதை அறியமுடிகிறது. மேலும் இந்த சாதனத்தில் 4410எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 55வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை இந்த சாதனம் ஆதரிக்கும்.

 காத்திருக்கலாம்

இந்தியாவில் iQoo ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கான சரியான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் சிறிது நாட்கள்காத்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Virat Kohli Spotted using 5G Smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X