OFFER விலையில் iPhone, Samsung, Xiaomi, Nothing போன்கள்.. Vijay Sales-ன் Open Box Sale-ல் ஆர்டர் அள்ளுது!
இந்தியாவில், மிகவும் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் ரீடெயில் செயின்களில் ஒன்றான விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆனது மெகா ஓப்பன் பாக்ஸ் என்கிற சிறப்பு விற்பனையை (Open Box Sale) அறிவித்துள்ளது. ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், டேப்லெட்டுகள் மற்றும் பல்வேறு வகையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகள் கிடைக்கிறது
ஒருவேளை விஜய் சேல்ஸ்-ன் இந்த ஓப்பன் பாக்ஸ் விற்பனையில், உங்களுடைய கவனம் முழுக்க ஆப்பிள் ஐபோன்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.விஜய் சேல்ஸ் ஓப்பன் பாக்ஸ் விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத 4 மொபைல் ஆபர்களின் பட்டியல் இதோ:

4. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது விஜய் சேல்ஸ் வலைத்தளத்தில் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது; இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ளது.
மேலும் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
3. ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi): நல்ல கேமரா செட்டப்பை கொண்ட ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மீ 14 சிவி மாடல் ஆனது விஜய் சேல்ஸ்-ன் இந்த ஓப்பன் பாக்ஸ் விற்பனையின் கீழ் தற்போது ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாகும்.
ஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.55-இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ், வழக்கமான வேப்பர் கூலிங் சிஸ்டம்களை விட மூன்று மடங்கு திறமையாக செயல்படுவதாக கூறப்படும் ஐஸ்லூப் (IceLoop) கூலிங் சிஸ்டம் போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எப்/1.63 அபெர்க்ஷர் மற்றும் 25மிமீ சமமான குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் + 2எக்ஸ் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 12-மெகாபிக்சல் 120 டிகிரி வைட் ஆங்கிள் ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டு 32-மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
இதுதவிர்த்து டால்பி அட்மோஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ-ஆதரவு கொண்ட ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 67W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஷாவ்மீயின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்யும்.
2. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus): ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மாடலின் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.57,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
1. சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus): சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,11,999 க்கு பதிலாக ரூ.1,00,454 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications